மனிதன் எனும் விருட்சம்

 

திருமலைசோமு

மனிதனுக்கு
வரையறை வகுக்க
எவரால் முடியும்

எல்லைக்குள் கட்டுப்படவும்
எளிதில் முற்று பெறவும்
மண்ணில் கரையும்
மழையின் துளியோ
மனிதன்…

இரவில் ஜனித்து
பகலில் மரிக்கும்
பனியின் துளியோ
மனிதன்…

இரு கரைக்குள் அடங்கி
நடைகள் மாற்றி
பயணம் போகும்
நதியோ மனிதன்….

இல்லை
துளி விந்தின்
விருட்சம் மனிதன்…

தன்
நெடும் பயணத்தில்
நீண்ட வெற்றிகளை
நெற்றிக்குள்
குவியலிட்டுக் கொண்டவன்
விரல் நுனிக்குள்
உலகை இயக்கும்
நூதனம் அறிந்தவன்

மனிதன்
மனிதனாய் மட்டுமல்ல
இறைவனாகவும்
அவதரிப்பவன்.

படத்திற்கு நன்றி :

http://www.livingpictures.org/trees.htm

 

2 thoughts on “மனிதன் எனும் விருட்சம்

  1. மனித குலத்தின் மீது நம்பிக்கை இழையோடுகிறது இந்தக் கவிதை வரிகளினால்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க