பொது

லோக்பால் மசோதா, விரைவில் அறிமுகம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரின் போது லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் 2011 ஏப்ரல் 21 அன்று குடிமைப் பணிகள் தினத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Manmohan singh

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மேலும் கூறியதாவது:

நமது அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்தவும், நிர்வாக முறைகள் நடைமுறைகளைச் சீரமைக்கவும், ஊழலுக்கு எதிரான முறையான செயல்பாட்டை விரைவுபடுத்துவதுமே நமது முக்கிய நோக்கமாகும். பொது மக்களின் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த முறைகள், பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடுகளை வெளியில் விற்பது, நிர்வாக முறையில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் நம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம்.

ஊழலுக்கு எதிரான முயற்சியில் உங்கள் அனைவரது பங்களிப்பு அவசியமாகும். நேர்மையான அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு உயர் அதிகாரிகளுக்கென்று தனி மதிப்பு மக்களிடையே என்றும் இருக்கிறது. உங்கள் அனைவரிடமும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நீங்கள் மேலும் வலுப்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும். நேர்மையாகவும். உண்மையாகவும் கட்டுப்பாட்டுடன் செயல்படும் குடிமைப் பணி அதிகாரிகளை மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

இவர்கள் பொது வாழ்க்கையிலும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாணயம், நேர்மை ஆகியவற்றுடன் செயல்படவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எப்போதும் ஒரு நிரந்தரமான இடம் இருந்தபோதும், பெரும்பாலான மாநிலங்கள் மூன்றாம் அடுக்கு நிலைகளில் உள்ளவர்களிடம் பொறுப்புகளையும் அதிகாரத்தையும் வழங்காமல் ஒதுக்கிவிடுகின்றன.

நமது சிவில் பணி அதிகாரிகள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பரவலாக்கவும், நமது நாட்டின் நிர்வாகத்தையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பெரும்பான்மையாகக் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது. சமூகத்தில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படும் நிலையை மாற்றவும், அவர்களுக்கு உரிமைகளை வழங்கவும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய சிவில் பணி அதிகாரிகளுக்கும் குழுக்களுக்கும் அமைப்புகளுக்கும் பிரதமர் விருதுகளை, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வழங்கினார். சிவில் பணியாளர் தினம் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய பணியாளர் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் வி. நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். அமைச்சரவைச் செயலாளர் கே. எம். சந்திரசேகர், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிர்வாகச் சீரமைப்பு, பொதுமக்கள் குறைதீர்ப்புச் செயலர் ஆர். சி. மிஸ்ரா நன்றி கூறினார்.

===============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    மின் தமிழில் யான் தமிழில் மொழியாக்கம் செய்யும் ராஜாஜி அவர்களின் அறிவுரைகளை, இந்த செய்தி நினைவூட்டுகிறது. ராஜாஜி கறார். மன்மோஹன் சிங் ‘டர்ர்ர்’ என்று தீயசக்திகளால் கிழிக்கப்பட்ட நல்ல மனிதர்.

    இந்த செய்தியை, என் அடுத்த இடுகையாக, மின் தமிழில், மூலத்திற்கு நன்றி கோரி, பதிவு செய்ய, ஆசிரியரிடம் அனுமதி கோருகிறேன். அவரே போட்டாலும் சரி தான். கருத்துக் கூறுகிறேன்

  2. Avatar

    மின் தமிழில் பதிவு செய்யலாம். தங்கள் கருத்துக்கு நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க