பொது

கிழக்கின் ‘அதிரடி’ புத்தகக் காட்சிகள்

kizhakkuஏப்ரல் 23 அன்று, உலகப் புத்தக தினம். இதை முன்னிட்டு, 2011 ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி, சுமார் 10 நாள்களுக்குக் கீழ்க்கண்ட இடங்களில் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகளைக் கிழக்கு பதிப்பகம் நடத்துகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் செய்தது போல பழைய, அழுக்கான புத்தகங்கள், இந்தக் கண்காட்சிகளில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்தச் சலுகை, இருப்பு உள்ளவரை மட்டுமே.

நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்:

மயிலாப்பூரில்:

தேஜா பவன்,
மயிலாப்பூர் தெப்பக் குளம் பேருந்து நிறுத்தம் எதிரில்,
ராமகிருஷ்ணா மிஷன் சாலை,
அடையாறு ஆனந்த பவன் அருகில்,
மயிலாப்பூர், சென்னை 600004
தொலைபேசி: 95000-45608

ராயபுரத்தில்:

ராசி மகால்,
எண் 123, மன்னார் கோயில் தெரு,
ராயபுரம், சென்னை 600013
தொலைபேசி: 95000-45609

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க