யுகநிதி, மேட்டுப்பாளையம்
Yuganidhi
அன்பை மட்டுமே உயிர்களிடத்தில்
காட்டுகின்ற அன்பான இதயம்..
ஆசைகளை அறவே அழித்தொழித்த
வாழ்வுக்குச் சொந்தமான உள்ளம்..

இன்பம், துன்பம் இவையிரண்டும்
ஒன்றென எண்ணி மகிழும் மனம்..
ஈதலில் குளிர்ந்து எதார்த்தத்தில்
குளித்து விளையாடும் நெஞ்சம்..

உறவுகளையும், பிற உயிர்களையும்
தம்முயிராய் நேசிக்கும் நேர்மை..
ஊருக்கெல்லாம் அமைதி வழிகாட்டி
முன்னே நடந்து செல்லும் பொறுமை..

எதுவந்த போதும் இன்முகத்தோடு
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்..
ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானாலும்
கருணையே மூச்செனும் தத்துவம்..

ஐந்திடமோ, ஐம்பதுகளிடமோ
பேசுகின்ற வார்த்தையில் மெண்மை..
ஒன்றென வாழும் நிலையைச் சொல்லி
நிலையில்லாததைச் சொல்லிடும் தன்மை..

ஓங்குபுகழ் வந்தனைத்த போதிலும்
பொங்கி வழிந்திடாத பேராற்றல்..
ஒளவைத் தமிழ் அமுதத்தை பருகியபோதும்
யார்மீதும் கர்வப்படாத சொல்லாற்றல்..!

இதுவே ஆன்மீக வழி என்பேன்
அதுவழி நடப்போரே நல்வாழ்த்துகள்..!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எது ஆன்மீகம்..?

  1. சார் நன்றாக இருந்தது,
    ஆன்மிகம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் .
    வாழ்த்துகள், உதகை சத்யன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *