தாகூர் 150: ரூ.5 நாணயம் வெளியீடு
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 5 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது.
இந்த நாணயத்தின் முன்புறத்தில் அசோகா தூணின் சிங்க முகம் இடம் பெறுகிறது. மையப் பகுதியில் சிங்க முகத்தின் கீழே மதிப்பு இலக்கம் ஐந்து என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும்.
நாணயத்தின் பின்புறம் ரவீந்திரநாத் தாகூர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்குக் கீழே 150ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் 1861 – 2011 பொறிக்கப்பட்டிருக்கும். இந்திய நாணயச் சட்டம் 1906இன் படி இதுவும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 5 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவையே.
================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://www.stampstodayindia.com