கலைஞர்களுக்கு ஓய்வூதியம் – ரூ.12.92 கோடி ஒதுக்கீடு
கலைகள் மற்றும் எழுத்துத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், 2010-11ஆம் ஆண்டில் (2011ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வரை) மொத்தம் ரூ.12.92 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகப் பண்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2007-08ஆம் ஆண்டில் ரூ.4.75 கோடியும், 2008-09ஆம் ஆண்டில் ரூ.4.91 கோடியும், 2009-10ஆம் ஆண்டில் ரூ.8.69 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர வெகுமதித் தொகை 2009-10ஆம் ஆண்டிலிருந்து ரூ.2000-லிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை