இலக்கியம்கவிதைகள்

தொலைதூரக் காதல்

 

 

பி.தமிழ் முகில் நீலமேகம்

 

உன் நினைவுகளில் நானும்

என் நினைவுகளில் நீயும்

நீங்காது நிலைத்திருக்க

தூரமும் தொலைவும் தான்

காதலை பிரித்திடுமா என்ன ???

 

அருகாமையும் அரவணைப்பும்

உணர்த்தாத காதலை

பிரிவும் தொலைவும்

தெள்ளத் தெளிவாய்

படம் பிடித்துக் காட்டிடாதோ ???

 

அனுதினமும் வளர்ந்திடுமே

அளவிலா   காதலும் ….

பிரிவதுவும் ஏற்படுத்துமே

ஆழமான வலுவான

அன்பின்  அஸ்திவாரம் !!!

 

உந்தன் அன்பின் அருமையை

எனக்கும் ……எந்தன் –

காதலின் வலிமையை

உனக்கும் ……உணர்த்திடாதோ ???

இந்த தொலைதூரக் காதல் !!!

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    காத்திருக்க காத்திருக்கத்தான் காதலில் வலு கூடும், தூரம் அதிகம் ஆக ஆகத்தான் துனையின் தாக்கம் அதிகம் இருக்கும் .நல்ல கவிதை.

  2. Avatar

    தங்களது வாழ்த்துகட்கு மிக்க நன்றி தனுசு அவர்களே !!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க