இலக்கியம்கவிதைகள்

காத்திருக்க வேணும்!

 

தேமொழி

 

பத்துப் பாத்திரம் கழுவ வேணும்
அழுக்குத் துணியும் துவைக்க வேணும்
தோசைக்குச் சட்னி அரைக்க வேணும்
இட்லிக்கு மாவும் அரைக்க வேணும்
கம்பளத்து தூசி நீக்க வேணும்

தொட்டியில் நீர் நிரப்ப வேணும்
மகன் குளிக்க வெந்நீரும் வேணும்
மகள் படிக்க விளக்கு வேணும்
இவை முடிக்க மின்சாரம் வேணும்
இதற்கு நாளும் காத்திருக்க வேணும்

 

 

ஓவியர்:
ஆனந்த விகடன் ஓவியர் இளையராஜா

படம் உதவி:
http://3.bp.blogspot.com/-3XGAslQGsiY/TalHLCq0ajI/AAAAAAAAArs/BLUd8sUAcOo/s320/woman2.jpg

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  கரண்டுக்காக நாம் காத்திருக்கும் போது நமக்கு உண்டாகும் டென்ஷனில் மண்டைக்கு ஏறும் சூடு இருக்கே….. பேசாமல் அந்த சூட்டிலிருந்தே கரண்ட் எடுத்து விடலாம் அப்படி ஒரு சூடு ஏறும். தேமொழி அவர்களுக்கு இது தான் நடந்திருக்கு என நினைக்கிறேன்.

  நல்ல சூடாகத்தான் இருக்கு ஏன் என்றால் படிக்கும் போதே ஷாக் அடிக்கிறதே. உரை வீச்சு வடிவிலான புதுக்கவிதைக்கு இது போன்ற யதார்த்த சம்பவங்கள் தான் சுவை சேர்க்கும். கால நேரத்துக்கு தகுந்த நல்ல கவிதை.

 2. தேமொழி

  ஒரு கவிஞரிடம் இருந்து கவிதைக்கு வரும் பாராட்டிற்கு தனி மதிப்புதான் இல்லையா?

  கவிதையைப் பற்றிய உங்கள் கருத்து மிகவும் ஊக்கமூட்டியது. நன்றி தனுசு.

  …தேமொழி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க