ஓவிய மாமேதை மாதவனின் பொங்கல் ஓவியங்கள்.
அன்புள்ள வல்லமை உள்ளங்களுக்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஓவியர் மாதவனை வல்லமை உள்ளங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமெனில் சாம்பா பதிப்பகம் வெளியிட்ட பாடப்புத்தகங்களை இங்கே நினைவு கூறவேண்டும். ஓவியர் மாதவனின் கைவண்ணம் மற்றும் கலைவண்ணம் காண்போரை மயக்கும். அவரின் கற்பனையில் உதித்த பொங்கல் படங்களை நம் வல்லமை உள்ளங்களுக்காக இங்கே வழங்குகிறோம்.
இந்த அறுவடைத் திருநாளில் பழையன கழித்து, புது சிந்தனைகளைக் கூட்டி, பகலவனைத் தொழுது,உழுத மாடுகளை வழிபட்டு வணங்கி கன்னல் சுவைத்து, இன்னல் நீங்கி, மின்னலாய் ஒளிர மங்கள வாழ்த்துக்களை பொங்கலோ பொங்கல் என நுரை பொங்க வல்லமை இதழ் மூலம் வழங்கி மகிழ்கிறோம்.
தூரிகை சின்னராஜ்
ஓவியர் மாதவனின் பொங்கல் ஓவியங்கள் கண்கவரும் வண்ணத்தில் மிகவும் நேர்த்தியாகவும் தத்ரூபமாகவும் வரையப்பட்டுள்ளன. பொங்கலின் உயிரூட்டம் அவற்றில் நிழலாடுகிறது. கிராமப்புறம் அப்படியே படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற தமிழ் ஓவியக்கலை உலகளாவிய நிலையில் புகழ் பெறவேண்டும். பாராட்டுகளும், வாழ்த்துகளும்…டாக்டர் ஜி. ஜான்சன்.
ஆஹா அருமையான ஓவியங்கள்