அறுமுகநூறு (2)
-D.சச்சிதானந்தம்-
முதல் பகுதி இங்கே
அடிமனக் கடலின் அமுதே போற்றி,
அறுமுக நிலவின் ஒளியே போற்றி,
அதிமது ரத்தின் சுவையே போற்றி,
அருள்மனம் பொங்கி அருள்வாய் போற்றி! 6
கவிமனம் கொண்ட கந்தா போற்றி,
குவிமனம் என்றாய் குகனே போற்றி,
செவியினில் மந்திரம் சொன்னாய் போற்றி,
புவியினைக் காக்கும் புதல்வா போற்றி! 7
அகமிகுங் குகனின் நினைவே போற்றி,
மிகமிகு மவனின் கருணை போற்றி,
முகமிகு முறுவல் தருவோன் போற்றி,
சுகமிகு மவனை நினைந்தே போற்றி! 8
இளமுறு வல்தரு வள்ளல் போற்றி,
வளமுறு மில்தரு மன்னன் போற்றி,
உளமுறு மல்லல் கொல்வோன் போற்றி,
குளமுறுங் கமலக் குழவியே போற்றி! 9
தண்டம் கொண்ட தருவே போற்றி,
அண்டம் காக்கும் உருவே போற்றி,
கண்டம் கறுத்தவன் மைந்தா போற்றி,
கொண்டோம் மனதில் உன்னைப் போற்றி! 10
படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2012/12/hindu-god-subramanya-pictures.html
இளமுறுவல் – வளமுறுமில் – உளமுறுமல்லல் – குளமுறுங்கமலம்
சொல்விளையாட்டில் ஆறடித்திருக்கிறாய் நண்பா!
வாழ்த்துகள்!
அதிமதுரத்தின் சுவை என்பது அற்புதமான உவமை. முருகனடி போற்றும் அருமையான கவிதை. படிக்கப் படிக்க மனம் உவகையில் பொங்குகிறது. மிக்க நன்றி.
பார்வதி ராமச்சந்திரன், தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.