பிரபா ஸ்ரீதேவனுக்குப் புதிய பொறுப்பு

0

prabha sridevanஅறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைவராக நீதிபதி திருமதி பிரபா ஸ்ரீதேவன், 2011 மே 9 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

2000ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதியான இவர், 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியமானது 1999ஆம் வருடத்திய வர்த்தக முத்திரைகள் சட்ட பதிவாளர் மற்றும் 2003ஆம் வருடத்திய காப்புரிமைச் சட்டப் பதிவாளர் 1999ஆம் வருடத்திய பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டப் பதிவாளர் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக அமைக்கப்பட்டது.

சென்னையில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது. தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் இதன் சுழற்சி முறை விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

==================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

படத்திற்கு நன்றி: http://www.dinamani.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *