மே 11ஆம் தேதி, ஏஐஈஈஈ மறுதேர்வு

0

2011ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏஐஈஈஈ) மே மாதம் முதல் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தேர்வு எழுத இயலாமல் போனவர்களுக்கு மே 11ஆம் தேதி, நாடு முழுவதும் குறிப்பிட்ட 39 நகரங்களில் மறுதேர்வு நடத்தப்படுகிறது.

ஒரே தேர்வு மையத்தில் ஒரே நாளில் ஏஐஈஈஈ தேர்வு மற்றும் ஆயுதப் படை கூட்டு மருத்துவத் தேர்வு (ஏஎப்சிஎம்) நடைபெற்றதால் ஏஐஈஈஈ தேர்வு  எழுத முடியாதவர்கள், பழைய அனுமதி அட்டைகளுடனோ அல்லது மத்திய செகண்டரி கல்வி வாரியமான சிபிஎஸ்ஈ-யின் இணைய தளத்தில் இருந்து படியிறக்கம் செய்யப்பட்ட அனுமதி அட்டையுடனோ தேர்வு எழுதலாம். தேர்வு எழுதும் நகரம், தேர்வு எண் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது.

வேறொரு மையத்தில் ஏஎப்எம்சி தேர்வு எழுத வேண்டியிருந்ததால் ஏஐஈஈஈ தேர்வு எழுத முடியாதவர்களும் சில நிர்வாக காரணங்களுக்காக ஏஐஈஈஈ தேர்வு எழுத இயலாமல் போனவர்களும் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பித்து, வெவ்வேறு மையங்களில் ஏஎப்எம்சி தேர்வு எழுத முடியாதவர்களும் தங்களது பெயர்களை சிபிஎஸ்ஈ இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் மே மாதம் 3-ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்து தகுதியானவர்களுக்கு அவர்கள் விரும்பிய நகரில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான பழைய தேர்வு எண்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்வு மைய தகவலைப் படியிறக்கம் செய்துகொள்ள இவர்கள், சி பி எஸ் ஈ -யின் http://www.cbse.nic.in இணையத் தளத்தையும் ஏஐஈஈஈ-யின் http://www.aieee.nic.in இணையத் தளத்தையும் காணலாம் என்று சிபிஎஸ்ஈ-யின் சிறப்புத் தேர்வுகள் இயக்குநர் கூறியுள்ளார்.

==================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *