இராஜராஜேஸ்வரி

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீது என்று

எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்;

 

வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

 

வீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று

பெண்கள்  ‌நிரூ‌பி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;

எட்டு மநிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று பலதுறைகளிலும்

இணையற்று சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள் பெண்கள்..

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டிவந் தோமென்று வேதனைகள் தீர்க்கின்றனர் பெண்கள்..

சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்

என பலதுறைகளிலும் முனைப்புடன் சாதனை படைத்துவருகிறாள் புதுயுக நவ யுவதியாக வலம் வரும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம் நாம்…

வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.

புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் மலர்ந்து மணம் வீசும் மகளிர் தினம் மகிழ்ச்சிக்குரியது ..

மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்!

இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும்.

தையலை உயர்வு செய்! என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்

இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் –

நிச்சயமாக நம்புங்கள் – அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.

 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்

கொண்டாடப்பட்டு வருகிறது.

1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

 அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்’ என வலியுறுத்தும் வகையில் சிறப்பாக மகளிர் தினம் கவனத்தில் கொள்ளப்படுகிறது ..

தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

மகளிர் தினத்தையொட்டி சில ஆண்டுகளாக ஆண்கள் துணையின்றி பெண் விமானிகளே பங்கு பெறும் விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

விமானத்தை பெண்களே இயக்குவது ஒரு புதுவிதமான அனுபவம். . நவீன யுகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “புதுயுகம் படைக்கும் மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..

  1. மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமான அற்புதப் படைப்பு. தங்களுக்கும் வல்லமைப் பெண்டிர் அனைவருக்கும் என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

  2.  @@ பார்வதி இராமச்சந்திரன். wrote on 8 March, 2013, 10:40
    மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமான அற்புதப் படைப்பு. தங்களுக்கும் வல்லமைப் பெண்டிர் அனைவருக்கும் என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்//
    .
    கருத்துரைகளுக்கும் வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

     மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.