திருமுருகன் துதிமாலை (3)

 

சத்தியமணி

 

தெளிவில்லா சிந்தனை வெளியேற வேண்டும்

அறிவோடு ஆக்கம் வேண்டும்

ஒளியில்லா இருள்தனில் ஓங்காரமாய்நீ

பளிச்சென்று தெரிய வேண்டும்

விளியோடு துதிபாடி துதிபாடி துதிபாடி

வேலவா மகிழ வேண்டும்

கிளியோடு மொழிபேசும் உன்மழலையொடு

கீர்த்தனை யோட வேண்டும்

மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

விளையாடும் வேலகுகனே

துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

முகங்காட்டும் சக்திமகனே   (3)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “திருமுருகன் துதிமாலை (3)

 1. “தெளிவில்லா சிந்தனை வெளியேற வேண்டும்” – முருகனைப் பற்றிப் பாடினால் தெளிவற்ற எண்ணங்கள் நீங்கி, நீரோடை போன்ற தெளிவான எண்ணங்கள் தோன்றும் என்பது உறுதி.

  தங்களது கவிதைக்கு நன்றி திரு.சத்தியமணி அவர்களே.

 2. பார்வதி புதல்வன் பக்தி பரமானந்தம்
  சண்முக அருளின் முக்தி சச்சிதானந்தம்
  பேரும் புகழும் அவன் பேரானந்தம்
  சேரும் நலனும் தரும் சிவானந்தம்
  நூறுஒரு புறம்  தமிழினிக்க – களிக்க!
  ஆறும் பெருகும்  அதுவரை   பொறுக்க‌
  அணைக்கட்டு உடைக்கும் வேல் இருக்க‌
  அனைவரும்   வாழிதமிழ்  பால் சிறக்க‌! 
  நன்றி

Leave a Reply

Your email address will not be published.