சத்தியமணி
தீமைகள் களைபவனே உமையின் மைந்தனே
ஆனைமுகத்தவனே அருள்முதற் பொருளோனே
நாமையம் அமர்ந்து நவின்றிடுவாய் சிந்து
அன்னையைப் பாடிட அமுதிடுவாய் விரைந்து
அன்னை யென்றுன்னை அழைப்பவரின் முன்னே
விரைந்திடும் தாயுனது புகழ்நிலத்து வாழியவே
முன்னை வினையெல்லாம் கடைவிழியின் கீற்றால்
கரைத்திடும் தாயுனது புகழ்நிலைத்து வாழியவே
தன்னை யுருவாக்கி தயைக்கருணை கொடையாக்கி
அரசியாய் அலங்கரிக்கும் மாசக்தி வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 1
மடலை விரிப்பதிலும் மணமதில் நிறைப்பதிலும்
மதுவுடன் மலர்கள்தரு மகிமையே வாழியவே
உடலை படைப்பதிலும் உயிரதில் நிலைப்பதிலும்
மனமதி அமைதிதரு மாதரசி வாழியவே
பயன்படும் பேரறிவும் பகுத்திடும் நுண்திறனும்
கொடுத்திடும் பெருங்கருணை கலைவாணி வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 2

Leave a Reply