அறுமுகநூறு (10)
-சச்சிதானந்தம்
குதித் தோடும் மயிலினைக் கொண்டாடுவான்,
குக் குடத்துக் கொண்டையில் நின்றாடுவான்,
துதித் தாடும் பக்தனும் பன்பாடுவான்,
கதித்த மலை நாதனைக் கண்டாடுவான்! 46
மிதித்தோடி மான்போல தீ தாண்டுவான்,
மதித்தோடித் தீ மிதித்து மனமாறுவான்!
உதித்தோடும் கதிர்காய வாடுமன்பன், மனதில்
உதித்தாடும் கந்தனால் தீ ஏறுவான்! 47
மிக்கக் கொண்ட முருகன் நினைவால்,
சொக்கிக் கண்கள் சுழலு கிறேன்,
முக்கண் கொண்ட ஈசனிடம், குளிர்
நெற்றிக்கண்ணைக் கோருகிறேன் அவனைக் காண! 48
சந்தனக் காப்பிட்ட சரவணன் முகத்தில்,
சிந்திடும் நறுமணப் புன்னகை தவழ்ந்து,
செந்தணல் காப்பிட்டு வடுவான நெஞ்சினுள்,
வந்திடும் தென்றலாய், வருடிடும் மென்மையாய்! 49
ஆதவன் ஒளிபெற்று மலர்ந்திடும் நிலவாய்நடம்,
ஆடிடும் ஈசனின் விழியொளியில் மலர்ந்தவனே,
ஆனை முகனடுத்து, ஆறுமுக வடிவெடுத்து,
ஆம்பலின் நிறமெடுத்த அழகான வடிவேலனே! 50
ungaludaiya arumuganooru kavithaigal anaithum migavum nandraga irukirathu.arumuganin ashirvatham ungalukkum ungal kudambathirkum kidaikattum.nandri by D.Geetha.
ஆறுமுகனின் பெருமைகளை எத்துணை படித்தாலும் ஆறுமோ ஆவல்?. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.
கவிதைகளைப் படித்து தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் சகோதரிகள் திருமதி.கீதா மற்றும் திருமதி.பார்வதி இராமச்சந்திரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.