அறுமுகநூறு (12)
-சச்சிதானந்தம்
கிரியைச் சுற்றி வலம் வருவோம்,
விரி மனமே என்று வணங்கிடுவோம்,
உறியைச் சுற்றிய கண்ணன் மருமகன்,
அடியைப் பற்றி நலம் பெறுவோம்! 56
வண்ண மயில் தோகையின் தண்டாக,
வெண்முகம் கொண்ட வடிவேலா! மனம்
வெண்டாகிச் சருகாகி, வன்மத்திற் கிரையாகி,
உண்டான வடு நீக்கு வேலா! 57
நடந்து நடந்து நடைபழகித் துன்பத்தைக்
கடந்து கடந்து துயர் விலகி,
அடர்ந்து படர்ந்த அறியாமை நீங்கி,
தொடர்ந்து உன்னைத் தொடர்ந்திடு வேனே! 58
மனம் புரண்டு, தடம் இருண்ட
நிலை கடந்து, நிறை வடைந்து,
இறை உணர்வில் தினம் மகிழ்ந்து,
எனை உனக்கு அர்ப்பணிக் கின்றேன்! 59
அதி மதுர மதி முகத்தில்,
எதி ரொலிக்கும் எழில் சிரிப்பில்,
உதித் தெழுந்த பெரும் ஒளியில்,
உழல் வினைகள் விலகி டுமே! 60
///அதி மதுர மதி முகத்தில்,///
இந்தச் சந்த வரி
மிகவும் இனிமையாக இருக்கிறது…
தங்கள் கருத்துக்கு நன்றி திரு.மகேந்திரன்