-சச்சிதானந்தம்

 

விடிந்தி ருக்கும் வை கறையில்,

படிந்தி ருக்கும் புது ஒளியே!

படிந்தி ருக்கும் மனத் துயரைக்,

கடிந்த கற்றும் நின் ஒளியே!                                                                                              61

 

தணிந் தெழுந்து விளையாடும் கடலலையை,

அணிந் தணிந்து நனைந்திருக்கும் செந்தூரனே,

பணிந் துனது தாள்களுக் கணிவிக்கவே,

புனைந் தேனினிய கவிதைகளே!                                                                                  62

 

முருகனை நினைந்து இருவிழி நனைந்து,

மருவிய மனதின் மாயை கடந்து,

குருவென அவனைப் புனைந்தடி பணிந்து,

கருவென குகனைப் பாவில் வைத்தேன்!                                                                         63

 

செருக்கென்னும் சீர்கேட்டில் சிதையாமல் செம்மையுற்று,

நெருப்பென்னும் தீமையினை நெருங்காத நெஞ்சமுற்று,

இருள்என்னும் அறியாமை அடையாமல் ஞானமுற்று,

பொருப்பெங்கும் பூத்தவனைப் பணிகின்ற பேறுபெற்றேன்!                                        64

 

அதிகாலை வானம்போன்ற அழகான ஆறுமுகனை,

நதிநீரின் சலசலப்பில் சுகமாக வாழ்பவனை,

நொதிக்கின்ற நெஞ்சத்தின் நோய்தீர்க்கும் நாதனை,

துதித் தென்றும் தூமனத்தைக் கொள்வோமே!                                                                65

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அறுமுகநூறு (13)

  1. //////செருக்கென்னும் சீர்கேட்டில் சிதையாமல் செம்மையுற்று,
    நெருப்பென்னும் தீமையினை நெருங்காத நெஞ்சமுற்று,
    இருள்என்னும் அறியாமை அடையாமல் ஞானமுற்று,
    பொருப்பெங்கும் பூத்தவனைப் பணிகின்ற பேறுபெற்றேன்!//////

    அருமையான வரிகள். தங்களால் நானும் அப்பெறற்கரிய பேறு பெற்றேன். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரரே!!!!  .                                    

  2. இருள்என்னும் அறியாமை அடையாமல் ஞானம் கொடுப்பவன்   தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமிநாதன்……அருள் பெருக்கில் வளரட்டும் அறுமுகநூறு

  3. திருச்சீரலைவாய் வேந்தனாம் 
    சேவற்கொடி மன்னவனாம் 
    செந்திலம்பதி ஆண்டவனாம் 
    முருகு மிகு அழகனாம் 
    சண்முகப் பெருமானுக்கு அழகிய பாமாலை..
    ==
    ///அணிந் தணிந்து நனைந்திருக்கும் செந்தூரனே …///
    இந்த வரிகள் மனதில் சிந்து பாடுகிறது..
    ==
    வாழ்த்துக்கள்..
    சகோதரரே

  4. வாழ்த்துக்களைத் தெரிவித்த திருமதி.பார்வதி இராமச்சந்திரன், திரு.சதியமணி மற்றும் திரு.மகேந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *