மே 18 – சர்வதேச அருங்காட்சியக தினம்
சர்வதேச அருங்காட்சியக தினம், 2011 மே 18 அன்று மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதுமுள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னை அருங்காட்சியகம், அலகாபாத் அருங்காட்சியகம், சத்திரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து சங்கராலயா, கொல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகம், தேசிய அறிவியல் குழும அருங்காட்சியகம், புது தில்லி, மும்பை, பெங்களுரு தேசிய நவீன கலை அருங்காட்சியகங்கள் புது தில்லி தேசிய அருங்காட்சியகம், ஐதராபாத் சாலார் ஜங் அருங்காட்சியகம், கொல்கத்தாவில் விக்டோரியா மெமோரியல் ஹால், சாரணாத் அருங்காட்சியகம், நாளந்தா, கோணார், நாகார்ஜுன கொண்டா மற்றும் இதர அருங்காட்சியகங்களிலும் மக்களுக்கு மே 18 அன்று இலவசமாகப் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தக் கொண்டாட்டத்தையொட்டி கருத்தரங்குகள், விரிவுரைகள், ஓவியப் போட்டிகள், சிறப்பு திரைப்படக் காட்சிகள் ஆகியவை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன.
புது தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் “புத்தர் கால கலை, மத்திய ஆசியாவில் அதன் தாக்கம்” குறித்த விரிவுரை நிகழ்ந்தது. வட கிழக்கு மாநிலங்களில் கலை நிகழ்ச்சிகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள், கருத்துப் படங்கள், நகைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பண்டைய கால நாணயங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய கலை மற்றும் பண்பாடு குறித்த திரைப்படமும் பொது மக்களுக்குத் திரையிடப்பட்டது.
==================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை