அன்னையர் தினத்தில் அன்னைக்கு கவிதை
சத்தியமணி
அம்மா!அம்மம்மா !
அன்பின் சின்னமா!!
ஆசைத்தீர ஆசிச் சொல்லும் என்னம்மா!!!
பூவாய்ச் சிந்தம்மா
புன்னகைத்தால் தேனம்மா
பாக்கியத்தில் நானும் உந்தன் சேயம்மா
என்னை ஈன்று எடுத்தாய்
இன்பப் பேரில் அழைத்தாய்
தமிழ்ச் சொல்லிக் கொடுத்தாய்
தரும் பாட்டை ரசித்தாய் ()
தத்தித் தத்தி வருகையில் தாவி எடுத்தாய்
தள்ளாடி நடக்கையில் தாங்கிப் பிடித்தாய்
பசியென அழுகையில் பாலும் கொடுத்தாய்
பள்ளிகூடம் செல்லுமெனைப் பார்த்து ரசித்தாய்
உன்னைப்போல் தெய்வதான் உண்டோசொல்
உன்மடியின் மகிமைக்கு உண்டோ சொல் ()
வேலைக்கெனச் செல்லுகையில் ஆசி அளித்தாய்
வெற்றிகளைக் கண்டவுடன் துள்ளிகுதித்தாய்
ஊரார்முன் எம்பெருமைப் பேசிகளித்தாய்
ஊட்டிவிட்டு மிச்சம்தனை நீயும் கொரித்தாய்
அன்னையுன் பணியினைப் பாராட்டுவேன்
என்னையுன் பணியாளாய்ச் சீராட்டுவேன் ()
இதற்கான மெல்லிசை ராகத்தோடு தாளத்தோடு கேட்க விரும்பின் youtube சொடுக்கவும் (அ) email sathiyamani@yahoo.com உங்கள் விருப்பத்தை அனுப்பவும் – நன்றி
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்” என்னும் திருக்குறளை நினைவூட்டும் அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே.
அற்புதமான சந்த நயத்தோடு கூடிய அன்னையர் தினக் கவிதை கண்களில் நீர் அரும்பச் செய்தது. பகிர்விற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
திரு சச்சிதானந்தம் அவர்களே, திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களே கவிதையை வரிகளால் ரசித்தமைக்கு நன்றி . மகவைக் கண்டதும் பாற்சுரக்கும் தாயின் இயல்பு போல் தயங்காமல் தமிழ் கவிதையைப் பாரட்டும் மனம் கொள்வோரை அடையாளம் கண்டுகொண்டேன். என் பெற்றோரும் அகமகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர். ஆசிவெள்ளப் பெருக்கில் ஆனந்தித்தேன் நான். எனது பியனோவில் இசையமத்து அதை ஒலிஒளி முத்தமிழ் வடிவாய்
http://www.youtube.com/watch?v=XZdNa8VBt3k&feature=youtu.be பதிவுசெய்துள்ளேன். கேட்டு மகிழவும். வாழ்கத் தமிழ்
சத்தியமணி ஐயா, தற்போதுதான் தங்கள் வீடியோவை யூட்யூபில் பார்த்தேன்! SUPERB!!!
பல்துறை வித்தகர் சத்தியமணி அவர்களுக்கு வாழ்த்துகள்!!!
இசையுடன் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது கவிஞர் சத்தியமணி அவர்களே.
….. தேமொழி
வல்லமையாளர்களே மகிழ்ச்சியும் நன்றியும். பகிர்வதிலும், பகிர்வதை நுகர்வதிலும் ,நுகர்வதில் மகிழ்வதிலும் தான் இன்பம். யாருமிங்கு தனிமையில் இல்லை. யாரும் பெரியவர்கள் இல்லை அன்றி சிறியவர்கள் இல்லை. எல்லார்க்குள்ளும் இன்னொருவர் இருக்கிறோம். இதை மூலமாக்கி எழுதிய
2012 புத்தாண்டு இசைப்படிவம்
http://www.youtube.com/watch?v=pZLUrcnpt9E&feature=youtu.be இதோ..கேட்க களிக்க…நன்றி