இலக்கியம்கவிதைகள்

ஒரு தாயின் ஏக்கம்

 

பி.தமிழ் முகில் நீலமேகம்

 

காலமெல்லாம் கழனிக்காட்டில்

காத்து மழையும் பாராம

கனலா சுட்டெரிக்கும் சூரியனையும் மதியாம

களை பறிச்சி காசு சேத்து

கண்ணான இராசா உன்ன

கருத்தா நானும் படிக்க வெச்சேன்

கடல் கடந்து நீயும் காசு சேர்க்க

கழனிக் காட்டையும் தான்

கடனுக்கு குடுத்தேன் !!!

கடனுந்தான் தீந்து போச்சு

காசுந்தான்  உனக்கு சேந்து போச்சு

கண்ணசர மறந்து காத்துக் கிடக்கும்

கருவுல சுமந்தவ நினைப்பும்

கனவுல வந்துபோற ஒன்னாச்சு !!!

கருக்கல்லுல வந்துடுவியோ – இல்ல

கண் தொறந்தா விடியல்ல வந்துடுவியோன்னு

கண்ணு ரெண்டும் பூத்துப் போயி

கண்ணான புள்ளை உன்ன

காணக் காத்துக் கிடக்குறேன் உன் ஆத்தா

கண் மூடுமுன்ன சுருக்குன்னு வந்துடனும் என் இராசா !!! 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    தாய்மையின் ஏக்கத்தைப் பதிவு செய்யும் மிக அருமையான வரிகள்.

  2. Avatar

    ஊக்கமளிக்கும் கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சச்சிதானந்தம் ஐயா அவர்களே !!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க