மலேசியாவில் உருவாகிறது ‘கைதி’
அஞ்சனா பிலிம்ஸ் சார்பில், மலேசியத் தமிழ் நடிகர்கள் நடிக்க, மலேசிய நாட்டில் படமாக்கப்பட்டு வரும் படம், “கைதி”.
பரமேஷ்வரின் திரைக்கதை, தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மலேசிய முன்னணி நடிகர்கள் காந்தி பெண், யாகு இருவரும் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வள்ளி, ஷாமு மற்றும் தமிழ் நடிகர் வரதராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு தாயின் பாசப் போராட்டம், வன்முறையைக் கையிலெடுக்கும் ஒரு இளைஞன், சட்டத்தைக் காக்கக் துடிக்கும் நாயகன்… என நவரசங்களும் இணைந்து போட்டி போடும் கதையம்சம் உணர்ச்சிப் போராட்டமாய் விளங்கும் கதை.
இப்படத்திற்காக, தமிழ்நாட்டில் நாமக்கல் அருகே “மைனா” புகழ் நாகுவுடன் வில்லன் வரதராஜ் குத்தாட்டம் போட “வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல” என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இளைஞர்களைச் சுண்டியிருக்கும் இப்பாடலுக்கு மலேசிய இசை அமைப்பாளர் ஷாமன் இசையமைக்க, பாடலைப் பன்னீர் செல்வம் எழுத, ஜிம்மி ஜிப் பாபு ஒளிப்பதிவு செய்கிறார்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு மலேசிய இயக்குநர் சீனு கதை எழுதி இயக்குகிறார்.
=======================================
தகவல் – மக்கள் தொடர்பாளர் செல்வரகு