ரஜினி நலம் பெற கூட்டுப் பிரார்த்தனை

0

Rajinikanthதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கக் கூட்டம், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் 2011 மே 22 அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா  தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முகசுந்தரம், சசிமோகன், மேலும் பல இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

கூட்டம் ஆரம்பம் ஆகி, தமிழ்த் தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள், சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, எழுந்து பேசினார். “நமது கலைக் குடும்பத்தின் மூத்த சகோதரர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும்
எழுந்து நின்று, கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்” என்று அறிவித்தார்.

உடன் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவர்களும் ரஜினியின் மனைவி லதாவும் மருமகன் தனுஷும் தெரிவித்துள்ளனர்.

=========================================
தகவல் – மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *