பொது

பிஎஸ்என்எல் ஆடியோ கான்பரன்ஸ்

bsnl

 

பிஎஸ்என்எல்-லும் சில்க் மீடியா நிறுவனமும் இணைந்து தொலைபேசி, கைப்பேசி ஆகியவற்றைப் பயன்படுத்தி செயல்படும் ஆடியோ கான்பரன்ஸ் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் ஏ. சுப்பிரமணியன் இந்த ஆடியோ கான்பரன்ஸை 2011 மே 23 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த வசதியைத் தொடங்கி வைத்துப் பேசிய போது, ஏ. சுப்பிரமணியன் தெரிவிக்கையில், இருக்குமிடத்தில் இருந்தே 15 முதல் ஆயிரம் பேர் வரை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளவர்களுடன் தங்களது தலைமையிடத்திற்கோ அல்லது சக சகாக்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கூறினார். ஏற்கனவே ப்ரி-பெய்ட் வசதி வைத்துள்ளவர்களுக்கு இத்தகைய ஆடியோ கான்பரன்ஸ் முறை நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது போஸ்ட்-பெய்ட் மூலம் இந்த ஆடியோ கான்பரன்ஸ் வசதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய கான்பரன்ஸ் மூலம் நேரம், பணம் அதிகம் செலவாவது தவிர்க்கப்படும். இத்தகைய வசதியை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது ஆடியோ கான்பரன்ஸூக்கு பிஎஸ்என்எல் தொலைபேசி வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி மற்ற தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நிமிடத்திற்கு 3 ரூபாய் 25 காசு வரை இதற்காக வசூலிக்க தற்போது திட்டமிடப்பட்டிருக்கிறது,

இந்த வசதியை பெற விரும்புவோர், மேலும் இதுபற்றிய விவரங்களை அறிய www.meetingjunction.net.in என்ற தளத்தினை அல்லது 080-25734334 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் தொலைபேசி – தமிழ் நாடு வட்டார தலைமை பொதுமேலாளர் எம். ஏ. கான், சென்னை தொலைபேசியின் பொதுமேலாளர் ரமேஷ், சில்க் மீடியா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் சாஸ்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

=================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க