இலக்கியம்கவிதைகள்

காட்டிலும்…

 

செண்பக ஜெகதீசன்

 

இறைவன் எழுதிய கவிதையை

இசையமைத்துப் பாடிடும்

வானம்பாடியும்,

கானக் குயிலும்..

 

மனப்பாடம் செய்திடும்

மாந்தோப்புக் கிளிகள்..

 

நடை பயின்று

நாட்டியத்தில் காட்டிடும்

வண்ண மயில்கள்..

 

அந்த

வேடமிட்டு நடிக்கும்

வான்கோழிகள்..

 

எல்லாம்

ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,

நன்றாய் இல்லையே குணத்தில்

ஒன்றியே உள்ளானே பணத்தில்…!

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  /////நன்றாய் இல்லையே குணத்தில்
  ஒன்றியே உள்ளானே பணத்தில்…!/////

  உண்மை. பணத்தில் ஒன்றிய மனித மனங்களில், நற்குணத்தின் மதிப்பு உணரப்பட வேண்டும். பகிர்விற்கு மிக்க நன்றி.

 2. Avatar

  பார்வதி இராமச்சந்திரன் அவர்களின்
  கருத்துரைக்கு மிக்க நன்றி…!
  -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க