வேலூரில் லினக்ஸ் & சைபர் கிரைம் கருத்தரங்கு

இந்திய சுதந்திரத்திற்கே வித்திட்ட வேலூரில் 2010 ஆக.1ஆம் தேதி, லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கினை இணையம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் விசுவல் மீடியா நிறுவனம், வேலூரில் உள்ள மேக்சிமைஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகின்றது.

வேலூர் ஊரிஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள காப் வளாகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில் கட்டற்ற (open source) மென்பொருள்களின் அறிமுகம், அதனுடைய அவசியம் விளக்கப்படவுள்ளது. அடுத்ததாக லினக்ஸ், நம் அரசின் சார்பில் சீடாக் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு உள்ள பாஸ் லினக்ஸ் இயங்கு தளம், பெடோரா லினக்ஸ், உபுண்டு போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றிய அறிமுகமும் அவற்றைக் கணிப்பொறியில் எவ்வாறு நிறுவுவது, பயன்படுத்துவது எப்படி என்பன போன்ற விபரங்களும் விளக்கப்படவுள்ளது.

லினக்ஸ் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு உண்டாகும், அவற்றிலுள்ள மேலும் பயன்படுத்ததக்க வகையிலுள்ள மென்பொருள்கள் பற்றியும் விளக்க உள்ளனர். இப்பயிற்சியினைச் சென்னையில் அமைந்துள்ள கட்டற்ற மற்றும் திறந்தமூல மென்வள தேசிய மையத்தின் திட்டப் பொறியாளர் ராமதாஸ் வழங்கவுள்ளார்.

பெருகிவரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தனிநபர்களைப் பாதுகாப்பது எப்படி? அவ்வாறு ஏதேனும் நடந்தால் அவற்றைச் சமாளிப்பது எப்படி என்று விரிவாக விளக்கப்பட உள்ளது. இறுதியாண்டுகளில் படிக்கும் மாணவ / மாணவிகள் தங்கள் பிராஜெக்ட்களைக் கட்டற்ற நிரல்களைக் கொண்டு எப்படி உருவாக்குவது என்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தக் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வமுரளி, தியாகராஜன் ஆகியோர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இக்கருத்தரங்கம் அதிக விலை கொடுத்து ஆபரேடிங் சிஸ்ட உரிமையை வாங்க முடியாமல் அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் தனிநபர் கணிப்பொறிப் பயனாளர்கள், இணைய மையங்கள், கடைகளில் கணிப்பொறி பயன்படுத்துவோர்கள், சிறுதொழில் கூட கணிப்பொறி பயனாளர்கள், தொழிற்சாலைக் கணிப்பொறி பயனர்கள் பலருக்கும் இந்தக் கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தம் கணிப்பொறிகளில் தைரியமாய் நிறுவி, சுதந்திரமாய் செயல்பட முடியும் என நம்புகிறோம். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்தக் கருத்தரங்கிற்கு அனைவரையும் வரவேற்கிறோம் என தெரிவித்தனர்.

இந்தக் கருத்தரங்கின் போது, ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் அடங்கிய டிவிடி அனைவருக்கும் விநியோக்கப்பட உள்ளது.

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்க – 99430-94945, 96000-75672

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *