தனிமை ஒரு வரமே
கவிதாயினி மதுமிதாவின் ‘தனிமை ஒரு வரமே’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி.
மிக உருக்கமான அந்த இனிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.
இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே:
தனிமை ஒரு வரமே
தனிமை ஒரு வரமே – மனமே
தனிமை ஒரு வரமே
இனிமை அது தருமே – உனக்கு
இனிமை அது தருமே
தன்னையே அறிந்து கொள்ள
தன்னிலை உணர்ந்து கொள்ள
தண்ணென்ற அமைதியும் சேர
தானாய் அமையும் அந்த தனிமை (தனிமை )
ஆயாசம் துடைத்துப் போக்க
அகிலம் முழுவதும் அணைக்க
அன்பும் உள்ளத்தில் ஊற
அருகில் நெருங்கும் அந்த தனிமை (தனிமை )
இயற்கையை இனிதே ரசித்து
இயைந்த மனதுடன் நெருங்கி
இணைந்தே என்றும் களிக்க
இயல்பாய் இசையும் அந்த தனிமை (தனிமை )
(02.07.2007)
NIce very nice, Manju , all the very best, Voice for the song is also Great. Geetha.M.
தனிமை ஒரு வரமே என்ற பாடல் இசையுடன்
பதிவு செய்யப்பட்டதைக் கேட்க இனிமையே!
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.