மெய்க் கீர்த்தி
மரங்கள் கூட அசையாத
வன்னிருட்டில் அவன் நடக்க, நடக்க
இருள் பழகி பாதை தெரிந்தது..
விடியலின் போதவன் போகும்
ஊர் போய் சேர்ந்திருந்தான்.
வரையவே வராது என்றிருந்தவன்
வரைந்து பார்ப்போமே என
வரைந்த ஓவியங்கள்
பெருந்தொகைக்கு விலை போயின..
முயன்று பார்க்கலாமென அவன்
முழு மூச்சாய் முயன்றவை முழுவதையும்
வென்றெடுத்தான்…
போதுமென்ற நிறைவோடு
ஓய்ந்திருக்க
என்ணியவன் ஒதுங்கி இருக்கையிலே
மரணம் அவனை ஆரத் தழுவியது…
படத்துக்கு நன்றி
http://www.visualphotos.com/image/2×4377802/dubai_uae_man_taking_rest_on_park_bench_along
மூச்சிறைக்க
முயற்சி செய்தவன்
சிறிது
ஓவ்வெடுக்க வந்தான்
காலம்
இரக்கப்பட்டு
நீண்ட ஓய்வு கொடுத்ததோ.
நல்ல கவிதை.வாழ்த்துகள்.
எளிமையான வரிகளில் ஆழமான கருத்துகளை வழங்கி இருக்கிறீர்கள். கவிதை அருமை. வாழ்த்துகள்.