காயத்ரி பாலசுப்ரமணியன்

 

மேஷம்: பெண்கள் சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், வேலையில் அதிக கவனம் செலுத்தலாம். மருத்துவச் செலவுகளைக் குறைக்க, பெற்றோர்கள் பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருதல் நல்லது. .கலைஞர்கள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருந்தால் கடன் தொல்லை இன்றி வாழ்க்கை ஓடும் . மாணவர்கள் தன் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை மேற்கொண்டால், வெற்றியை தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வழக்கு விவாகாரங்களில் நேரடி கவனம் தேவை.

ரிஷபம்: நிர்வாகத் திறமை கொண்ட பணியாளர்கள் பேச்சிலும் நிதானமாக இருந்தால், உடன் இருப்பவர்களின் உதவி எப்போதும் இருக்கும். பெண்கள் உறவுகளோடு வீண் வாக்குவாதத்தில் இறங்கமலிருந்தால் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வது எளிது. வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர், தகுந்த வாய்ப்பு வரும் வரை காத்திருந்தால், பண நஷ்டம் மனக் கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். அதிகமாக புகழ்பவர்களிடமிருந்து கலைஞர்கள் விலகி இருப்பது அவசியம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு பயணங்களால் அலைச்சலும், ஆயாசமும் அவ்வப்போது வந்து போகும்.

மிதுனம்முதியவர்கள் சரியான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் இரண்டையும் மேற்கொண்டால்,ஆரோக்கியம் பொலிவோடு திகழும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் கலைஞர்களின் கனவுகள் நனவாகும். மாணவர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். எனவே வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடன் செய்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செயவதைக் குறைத்துக் கொண்டால், சேமிப்பு தானே உயரும். வியாபாரிகள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

கடகம்: இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் எப்போதும் கனிவாகப் பேசுவது அவசியம். மாணவர்கள் நினைவில் வைக்க வேண்டியவற்றை எழுதிப் பார்ப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு இருக்க, பணிகளை உடனுக்குடன் முடித்து விடுவதில் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் நம்பிக்கையோடு சிறிது புத்திசாலித் தனத்தையும் சேர்த்துக் கொள் வது முக்கியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் , நல்ல இதயங்களை புண்படுத்தாமல் நடப்பது நன்மையைத் தரும்.

சிம்மம்: வியாபாரிகள் நன்கு முயற்சி செய்தால் வங்கி தரும் ஆதரவை வளத்துக்கு அஸ்திவாரமாக மாற்றிக் கொள்ளலாம். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளை கட்டுக்குள் வைத்து விட முடியும். மாணவர்கள் நண்பர்களை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் பணிவைப் பயன்படுத்தினால், நல்ல பெயரோடு பெறும் லாபமும் அதிகரிக்கும். இந்த வாரம் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

கன்னி: கலைஞர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பிறரின் நிறை குறைகளை அலசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. மாணவர்கள் , தேர்வு நேரங்களில் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம். பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கை யைப் பெற, பொறுமையாக செயல்படுவது முக்கியம். எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பண விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். இந்த வாரம் கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்படலாம்.

துலாம்: பெண்கள் குடும்பத்தில் சச்சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ் டமும் உங்களை தேடிவரும். வியாபாரிகள் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமலிருந்தால்,கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும். கலைஞர்கள் கவனமாக இல்லையென்றால் சில தொந்தரவுகள் தோன்றும்.

விருச்சிகம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் அவ்வப்போது தோன்றும் வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் உங்கள் கடமைகளை முடித்தால் உறவுகள் நடுவே உங்கள் அந்தஸ்து உயரும். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கலைஞர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

தனுசு: பெண்கள் பணிபுரியும் இடம் மற்றும் இல்லத்தை நேர்த்தியாக வைத்திருப்பார்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். பணியில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெய ரைப் பெறுவது எளிதாகும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மீண்டும் நட்பு பலம் பெறும். கலைஞர்கள் தங்கள் திறமையால் பிறர் கவனத்தையும், வாய்ப்புக்களையும் ஈர்ப்பார்கள். மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும்.

மகரம்: பெண்கள் தங்க நகைகளை இரவலாய் வாங்குவது, இரவலாய் கொடுப்பது- இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பணியில் இருப்பவர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.

கும்பம்:முதியவர்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறா ர்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருபவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.

மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைத் துறையினர் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். பொது வாழ்வில் இருபவர்கள் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளை தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். மாணவர்கள் போட்டிகளைச் சவாலாக ஏற்றுக் கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *