இந்தியாவில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா
ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்கல், 31.05.2011 அன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். அவருக்குச் சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது வழங்கப்பெற்றது. மேலும் சில ஒப்பந்தங்களும் கையொப்பம் ஆகின.
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ஜெர்மன் வேந்தர் செல்வி ஏஞ்சலா மெர்கல் புது தில்லியில் 31.05.2011 அன்று செய்தியாளர்களிடையே பேசினர்.
ஜெர்மன் நாட்டின் போக்குவரத்து, கட்டடம், நகர மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் பீட்டர் ராம்சார், புதுதில்லியில் 31.05.2011 அன்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி. கே. வாசனைச் சந்தித்துப் பேசினார்.
=================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
சர்வதேச மன்றங்களில்,ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்கல் அவர்களுக்கு ஏகப்பட்ட மதிப்பு. அது ஏற்புடையதே.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலாவுக்கு ஜவஹர்லால் நேரு விருது
அளிக்கப்பட்டது சாலப் பொருத்தம்.ஜெர்மனியில் இனி அணு
மின் நிலையங்கள் கிடையாது என்று உத்தரவு இட்டதுடன்
பழைய மின் நிலையங்களும் படிப்படியாக மூடப்படும் என்று
அறிவித்தது ஏஞ்சலா அவர்களின் மனிதாபிமானத்தைக்
காட்டுகிறது. ஜப்பான் அணு மின் நிலைய நிகழ்வுகள் தங்கள்
கண்ணைத் திறந்துவிட்டதாக ஏஞ்சலா கூறுகிறார். ஆனால்
நம் அரசியல்வாதிகள் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு
இருக்கிறார்களே. அம்மையார் ஹிட்லர் பிறந்த நாட்டில்
வாழ்பவர்! நம் நாடோ புத்தர், காந்தி வாழ்ந்த நாடு.
இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.