Featuredஇலக்கியம்பத்திகள்

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (2) – பெர்லின், ஜெர்மனி

சுபாஷிணி ட்ரெம்மல்

ஜெர்மனியில் எனது கடந்த 14 ஆண்டு கால வாசத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். நான் வாழ்கின்ற பாடன் உட்டென்பெர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரிலேயே குறிப்பிடத்தக்க உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் உள்ளன.

ஜெர்மனியில் முக்கிய நகரங்கள் பலவற்றில் வருடத்திற்கு இருமுறை, அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தின் இறுதியிலும் இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் Lange Nacht der Museen அதாவது “நீண்ட இரவில் அருங்காட்சியகங்கள்” என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு அந்த நகரில் உள்ள எல்லா அருங்காட்சியகங்களையும் சென்று பார்த்து வரக் கூடிய வாய்ப்பினை நகராண்மைக் கழகம் பொது மக்களுக்காக வழங்குகிறது. இந்த அருங்காட்சியக பார்வைக்காக பேருந்துகளைத் தயார் செய்து பொது மக்கள் ஒரு அருங்காட்சியகத்திலிருந்து மற்றொன்றிற்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதியில் அன்றைய தினத்தில் அமைந்திருக்கும். மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு மூன்று மணி வரை பொதுவாக அருங்காட்சியகங்கள் இத்தினத்தில் திறக்கப்பட்டிருக்கும். இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆண்டுக்கு ஒருமுறையாவது நான் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இணையத்திலேயே முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்து பெற்றுக் கொண்டு அன்று இலவசமாக இரயிலில் பயணித்து நகருக்குச் சென்று அங்குள்ள பேருந்துகளில் ஒவ்வொரு அருங்காட்சியகமாகச் சென்று அறிமுகம் பெற்று கண்காட்சிகளையும் கண்டு பயன்பெற முடியும்.

ஜெர்மனியைப் பொறுத்த வரை பெரிய நகரங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன என்று சொல்லி விட முடியாது. சிறு கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கூட அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக தென் பகுதி கருங்காடு என அழைக்கப்படும் Black Forest பகுதியிலும் ஆங்காங்கே மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சில அருங்காட்சியகங்களைக் காணலாம். இப்படி மூலைக்கு மூலை அருங்காட்சியகங்கள் நிறைந்திருப்பது, பெரிதோ, சிறிதோ அந்த நகரத்தை, அக்குறிப்பிட்ட பூகோளப்பகுதியைப் பற்றிய சில தகவல்களை வருகைத் தருவோருக்கு வழங்கவே செய்கின்றன.

ஜெர்மனியில் பல அருங்காட்சியகங்கள் உள்ள போதிலும் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரின் அருங்காட்சியகங்களிலிருந்து தொடங்குவது ஆர்வமளிப்பதாக உள்ளமையால் பெர்லின் நகரின் அருங்காட்சியகங்கள் பற்றி முதலில் காண்போமே!

அருங்காட்சியகத்தீவு (Museum island, Berlin) தொடக்கப்பகுதி - போட அருங்காட்சியகத்துடன் தொடங்குகின்றது. (ஆகஸ்ட் 2013)
அருங்காட்சியகத்தீவு (Museum island, Berlin) தொடக்கப்பகுதி – போட அருங்காட்சியகத்துடன் தொடங்குகின்றது. (ஆகஸ்ட் 2013)

344.3 sq miles அளவு கொண்ட பெர்லின் நகரத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் ஒரு விஷயம் தானே. இணையத்தில் கிடைக்கும் ஒரு வலைப்பக்கத்தில் உள்ள குறிப்பின் அடிப்படையில் இங்குள்ள அருங்காட்சியகங்களின் பட்டியலைத் தருகிறேன். காண்க!.

Alte Nationalgalerie
Altes Museum
Antikensammlung Berlin
Bode Museum
Neues Museum
Egyptian Museum of Berlin
Pergamon Museum
Antikensammlung Berlin
Anne Frank Zentrum
Brecht House
Bunker
DDR Museum
Deutsche Guggenheim
Deutsches Historisches Museum
Ephraim-Palais
Knoblauchhaus
Märkisches Museum
Museum für Naturkunde
Friedrichswerder Church
galerie son, contemporary art gallery with a focus on German and Korean artists
The Kennedys (museum)
Hamburger Bahnhof: Museum of the Present, with exhibits of contemporary art
Bauhaus Archive
Kulturforum
Berlin Musical Instrument Museum
Gemäldegalerie, Berlin
Kunstgewerbemuseum Berlin
Kupferstichkabinett Berlin
Neue Nationalgalerie
Filmmuseum Berlin
Memorial to the German Resistance
Sugar Museum
Computerspielemuseum Berlin (Computer Games Museum)
East Side Gallery
Berlinische Galerie
Checkpoint Charlie Museum
German Museum of Technology
Jewish Museum Berlin
Martin Gropius Bau
Schwules Museum
Topography of Terror
Beate Uhse Erotic Museum
Berggruen Museum (“Picasso and his Time”)
Bröhan Museum
Charlottenburg Palace
Käthe Kollwitz Museum
Museum of Photography
Museum of Pre- and Early History
Scharf-Gerstenberg Collection
Allied Museum
Botanical Garden and Botanical Museum
Brücke Museum
Ethnological Museum of Berlin
Museum of Asian Art
Museum Europäischer Kulturen
Köpenick Palace
Kunstgewerbemuseum Berlin
Berlin-Hohenschönhausen Memorial
Stasi Museum
Liebermann Villa
Schloss Britz
நன்றி: http://en.wikipedia.org/wiki/List_of_museums_and_galleries_in_Berlin
குறிப்பு: மேல் குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள பெயர்கள் டோய்ச் மொழியிலும் ஆங்கில மொழியிலும் என் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு அருங்காட்சியகமாக சென்று வருவது என்பது சற்றே கடினம் என்பதோடு அதற்காகத் தேவைப்படும் நேரத்தையும் ஒதுக்க வேண்டிவரும். ஆனால் நமது தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ற வகையில் அருங்காட்சியகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குச் சென்று வருவது அருங்காட்சியக ஆர்வலர்களுக்குப் பயன்தரும்.

பெர்லின் சுவரின் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் சில சாலையோர அருங்காட்சிப் பொருளாக (ஆகஸ்ட் 2013).
பெர்லின் சுவரின் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் சில சாலையோர அருங்காட்சிப் பொருளாக (ஆகஸ்ட் 2013).

பெர்லின் நகரைப் பொருத்தவரை இது நூற்றாண்டுகளின் சிறப்புகளைக் கொண்ட ஒரு நகரம். கடந்த நூற்றாண்டில்நிகழ்ந்த நாஸி அரசியல் படுகொலைகள், அரசியல் விஷயங்கள் இப்பட்டியலில் உள்ள சில அருங்காட்சியகங்களுக்கு மைய அம்சங்களாகத் திகழ்கின்றன. ஒரு சில குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் பெர்லின், ஜெர்மனி என்ற எல்லையைக் கடந்து உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நமக்கு காட்சிக்கு வழங்கும் கருவூலங்களாக இருக்கின்றன.

ஜெர்மானிய கடல் ஆய்வுத்துறையினர் அட்லாண்டிக் சமுத்திரத்திலும், பஸிபிக் சமுத்திரத்திரத்திலும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட அறிய பொருட்கள் சில அருங்காட்சியகங்களைப் பெருமை செய்கின்றன. தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஐக்கிய அரபு நாடுகளிலும் ஆப்பிரிக்க கண்டங்களிலும், வட ஆசிய கண்டத்திலும் செலவிட்ட பல தொல்லியல் ஆய்வுத்துறையினரின் அறிய கண்டுபிடிப்புக்கள் பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் இருந்து பெர்லின் மட்டுமல்லாது உலக நாகரிக வளர்ச்சியை மக்களுக்கு விளக்கும் நற்றொண்டை ஆற்றுகின்றன. தொழில்நுட்பத்துறையினரின் ஆய்வுகள் கணினி, மருத்துவம் போன்ற துறைகளில் தங்கள் வாழ் நாளையே அர்ப்பணித்த மேதைகளின் ஆய்வுகள் பல பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் நிறைந்திருக்கின்றன.

ஜெர்மானிய தத்துவ மேதைகள் உலக தத்துவ சிந்தனை வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஆய்வுக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். இத்தத்துவ மேதைகளின் நூல்களையும் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் விளக்குவனவாக பெர்லினில் உள்ள சில அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. வாகனங்கள், தாவரங்கள், காடுகள், கடல் உயிரினங்கள ஆய்வு பற்றிய தகவல் நிறைந்த அருங்காட்சியகங்கள் உள்ளன. அத்தோடு நின்றுவிடவில்லை. ஜெர்மனிக்கே பிரபலமான Curry Würst (கரி உர்ஸ்ட்) எனச் சொல்லப்படும் உணவு வகையை விளக்கும் அருங்காட்சியகம், கட்டிடங்களைப் பற்றி விளக்கும் கட்டுமான அருங்காட்சியகம், கணினி விளையாட்டு பற்றிய வரலாறு கூறும் அருங்காட்சியகம் என்று விரிவான பல துறைகளை அடிப்படை அம்சமாகக் கொண்ட அருங்காட்சியகங்கள் பெர்லினில் உள்ளன.

பெர்லின் நாஸி ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகத்தில் (Holocaust museum) (ஆகஸ்ட் 2013).
பெர்லின் நாஸி ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகத்தில் (Holocaust museum) (ஆகஸ்ட் 2013).

இதில் முதலில் பெர்லின் நகரின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாகவும், பெர்லினுக்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு அளிக்கப்படும் கையேட்டில் அருங்காட்சியகங்களின் பட்டியலில் முதலிடம் பெற்று நிற்கும் பெர்காமோன் அருங்காட்சியகத்திற்கு (Pergamon Museum) உங்களை முதலில் அழைத்துச் செல்கிறேன்.

தொடரும்…

Print Friendly, PDF & Email
Share

Comments (10)

 1. Avatar

  சமீபத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், மாமல்லபுரம் வரையிலான 12 சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல, பேருந்து வசதியைச் செய்து கொடுத்தது. ஒரு முறை டிக்கட் எடுத்தால் போதும், ஒவ்வொரு சுற்றுலாத்தலமாக இறங்கிப் பார்த்துவிட்டு, அடுத்தடுத்து வரும் பேருந்துகளில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். இது எப்படிச் செயல்படுகிறது என்பது தெரியவில்லை. 

  தாங்கள் கூறியதுபோல், தமிழக அரசும், அருங்காட்சியத்திற்கென்று பிரத்யேகமாக பேருந்து இயக்கினால் அருங்காட்சியகத்தைக் காண ஆர்வமுள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும், ஆனால் ஜெர்மனியில் உள்ளதுபோல் நம்நாட்டில் அத்துணை அருங்காட்சியகம் இருக்குமா?..என்பது சந்தேகமே.

 2. Avatar

  //சிறு கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கூட அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன.//

  //மூலைக்கு மூலை அருங்காட்சியகம்//

  என்பதும் மலைப்பான தகவல்கள். ஜெர்மனியைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறியும் ஆர்வம் அதிகரிக்கச் செய்துவிட்டது தங்களின் கட்டுரை.

 3. Avatar

  ரொம்ப அருமையாக, விளக்கமாக, எளிமையாக‌  எழுதியிருக்கிறீர்கள். படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 4. Avatar

  ஜெர்மன் நாடும் பெர்லின் நகரமும் மிகவும் பழமையானது எனினும் இங்கு இருக்கும் அருங்காட்சியகங்கள் 50 எனும் போது வியப்பாகவே இருக்கிறது. புதிய தகவலுன் வரும்
  ஜெர்மன் தொடர் படிக்க ஆவல் தருகிறது.

 5. Avatar

  சுவையாகச் செல்கிறது சுபா.
  ஆனி பிஃரான்க், கம்புயூட்டர் கேம், டெக்னாலாஜி அருங்காட்சியகங்களைப் பற்றி மிகவும் விரிவாக எழுதவும்.

  அன்புடன்’
  …..தேமொழி 

 6. Avatar

  நன்றி தேமொழி. முடிந்தவரை ஒரே நகர் என்றில்லாமல் பல நாடுகள் நகரங்கள் என மாற்றி மாற்றி எழுதலாம் என நினைக்கின்றேன். நிச்சயம் டெக்னிக்கல் மியூசியம் பற்றி எழுதுவேன்.

  சுபா

 7. Avatar

  திரு.தனுசு – ஜெர்மனியில் 50 அருங்காட்சியகங்கள் மட்டுமல்ல. நான் குறிப்பிட்டது 344.3 sq miles அளவு கொண்ட பெர்லின் நகரத்தில் மட்டுமே 50க்கும் மேற்பட்டவை உள்ளன என்பதே. மொத்த நாடு முழுக்க எண்ணினால் ஏறக்குறைய 1200 அருகாட்சியகங்கள் இருக்கலாம் என்பது என் ஊகம்.

 8. Avatar

  திரு.பெருவை பார்த்தசாரதி – என் அனுபவத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஏதாகினும் ஒரு அருங்காட்சியகம் என்று தமிழகத்திலும் இருக்கின்றன. நான் தமிழகத்தில் பார்வையிட்ட அருங்காட்சியகங்கள் பற்றிய விபரங்களையும் தொடரில் குறிப்பிட நினைத்திருக்கின்றேன்.

 9. Avatar

  முதலில் தங்களின் எழுத்து நடை அருமை.

  ஒரு காட்சி ஆயிரம் அர்த்தம் கூறும் என்பார்கள் அந்தவகையில் அறிவார்ந்த விசயங்களை ஆங்காங்கே அழகுடன் அமைத்து அனைவரையும் சிந்திக்க செய்யும் நல்ல ஏற்பாடுகள் அந்நாடு முழுவதும் இருப்பது அவர்கள் அறிவார்ந்த விஷயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு சான்றாகுகிறது. 

  ///ஜெர்மானிய தத்துவ மேதைகள் உலக தத்துவ சிந்தனை வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஆய்வுக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். இத்தத்துவ மேதைகளின் நூல்களையும் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் விளக்குவனவாக பெர்லினில் உள்ள சில அருங்காட்சியகங்கள் இருக்கின்ற///

  அருமை, நல்ல பலத் தகவல்கள் தொடருங்கள் சகோதரி..

 10. Avatar

  அருங்காட்சியகங்கள் பற்றி எழுத வேண்டுமென்ற தங்கள் ஆவலை மனதாரப் பாராட்டுகின்றேன். காலத்தை வென்று நிற்கும் கலைப் புதையல்கள் நிறைந்த இடங்களல்லவா அவை!
  முதலில் தாங்கள் அழைத்துச்செல்ல உள்ள பெர்காமோன் அருங்காட்சியகத்திற்குத் தங்களோடு பயணப்பட நாங்களும் தயாராக உள்ளோம் சுபாஷிணி. தொடங்குங்கள் உங்கள் வெற்றிப் பயணத்தை! வாழ்த்துக்கள்!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க