தனுசு

 

நீ
எதையோ தொலைத்ததுபோல்
தேடுகிறாய்
தேடுவது என்னவென்று
உனக்கே தெரியவில்லை…

நீ
எதையோ இழந்ததைப்போல்
தவிக்கிறாய்
இழந்ததும் என்னவென்று
உனக்கே தெரியவில்லை…

நீ
எங்கேயோ சேர
துடிக்கிறாய்
எங்கே என்று
உனக்கே தெரியவில்லை…

நீ
தங்கிக்கொள்ள ஒர் இடம்
தேடுகிறாய்
அது எந்த இடமென்று
உனக்கே தெரியவில்லை…

அனைத்திற்கும்
நான் பதில் தரவா?

நீ
தேடுவது என்னை
நீ
இழந்தது உன்னை
நீ
சேர துடிப்பது என்னிடம்
நீ
தங்க ஏங்குவது என் இதயம்

இன்னுமா
உனக்கு புரியவில்லை
நீ
என்னை
காதலிக்க தொடங்கிவிட்டாய்.

ஆனால்
வேண்டாமடா பாலகா
பின்னாளில்
தாடி தான் வளர்ப்பாய்
கண்ணாடியில் பார்
இன்னும் உனக்கு
மீசையே முளைக்கவில்லை.

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “காதலோ காதல்.

 1. அழகான, வியக்க வைக்கும் சொல்லோவியம்!. தனுசு பாணி கவிதைகளிலேயே மிகவும் வித்தியாசமான கவிதை. கடைசி வரிகளைப் படித்து விட்டு மிகவும் ரசித்தேன். அற்புதமான பகிர்வுக்கு மிக்க நன்றி கவிஞரே!!

 2. கைக்கிளை!
  🙂
  நல்ல கவிதை. தனுசு பாணி. ம்ம்ம்….. சங்கீதத்தில் பாலக்காடு மணி ஐயர் பாணி என்றால் மிருதங்கத்தில் பிரசித்தம். ஃபிடில் என்றால் T. N. கிருஷ்ணன் பாணி. அப்படி கவிதை உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் தனுசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  புவனேஷ்வர்

 3. எது கவிதை? யார் கவிஞன்?
  கண்ட காட்சியை கருத்தாக்கி – அப்போது
  கொண்ட உணர்ச்சியை கருவாக்கி  
  ஆன்றோர் அறிவை அதில் பொருத்தி
  நன்றாதீதாவென நயம் பார்த்து
  நன்றெனில்வியந்தும் தீதெனில்கடிந்தும்
  அழகுற மொழிவதுக் கவிதை – அதை 
  உலகுற பொலிவது கவிஞன்.

  அழகிய கவிதை 
  அறிவுரை அதன் விதை!

  நண்பரே நீவீர் கவிஞரே!

  வாழ்த்துக்கள்.

 4. அருமை நண்பரே! வழக்கம் போல் கலக்கி இருக்கிறீர்கள். சின்னப் பசங்க எங்கேங்க சொன்னாக் கேக்கறானுங்க?

 5. பார்வதி இராமச்சந்திரன்&புவனேஷ்வர் wrote
  ///தனுசு பாணி கவிதைகளிலேயே மிகவும் வித்தியாசமான கவிதை. கடைசி வரிகளைப் படித்து விட்டு மிகவும் ரசித்தேன்.////

  புவனேஷ்வர் wrote
  ///தனுசு பாணி. ம்ம்ம்….. சங்கீதத்தில் பாலக்காடு மணி ஐயர் பாணி என்றால் மிருதங்கத்தில் பிரசித்தம். ஃபிடில் என்றால் T. N. கிருஷ்ணன் பாணி. அப்படி கவிதை உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் தனுசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.///

  பாணி என்று தாங்கள் குறிப்பிடுவது எனக்கு ஏதோ மகுடம் சூடிக்கொண்டது போல் ஒரு ஊனர்வு தருகிறது.இருந்தும் பாணியை உருவாக்கிக்கொள்ள நான் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும், எழுதுவது அமைந்து விடுகிறது. தாங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் என்னை இப்படியே இன்னும் எழுத உற்சாகப்படுத்துகிறது. மிக்க நன்றிகள்.

  Alasiam G wrote
  ///கண்ட காட்சியை கருத்தாக்கி – அப்போது
  கொண்ட உணர்ச்சியை கருவாக்கி
  ஆன்றோர் அறிவை அதில் பொருத்தி
  நன்றாதீதாவென நயம் பார்த்து
  நன்றெனில்வியந்தும் தீதெனில்கடிந்தும்
  அழகுற மொழிவதுக் கவிதை – அதை
  உலகுற பொலிவது கவிஞன்.

  அழகிய கவிதை
  அறிவுரை அதன் விதை!////

  சிலிர்க்க வைக்கும் தாங்களின் கவிதை வடிவிலான பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே.

  சச்சிதானந்தம் wrote
  ///வழக்கம் போல் கலக்கி இருக்கிறீர்கள்…..////

  ரசித்து மனம் நிறைந்து கொடுத்த பாராட்டுக்கு மிக்க நன்றிகள் நண்பரே.

 6. கேள்விக்குறியாகிவிட்ட காதலைக்
  கேள்வி பதிலிலே விளாசியிருப்பது
  நல்ல
  கவித்துவ முயற்சி..
  வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *