செய்திகள்

12 -ஆம் ஆண்டுக் கம்பன் விழா அழைப்பிதழ்.

 

 பெஞ்சமின் ,இலெபோ 

செயலர் 

பிரான்சு கம்பன் கழகம்.

 

Kamban vizha P1

 

Kamban vizha P2

 

Kamban vizha P3

Kamban vizha P4

 

Kamban vizha P5

Kamban vizha P6

Kamban vizha P7

Kamban vizha P8

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (4)

 1. Avatar

  பரபிரமத்தையே நாயகனாக்கி; இந்த மானுடம் வெல்ல; உலகில் உள்ள மனிதனை எல்லாம் உள்நோக்கியப் பயணம் போக; நாடும், மக்களும், மன்னனும், உலகை பற்றிய உள்ளுணர்வும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும். 

  தனிமனித புற வாழ்வு எத்தகைய விழுமியங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் தனது பெருங் காப்பியத்தின் வழியே உலக மாந்தர்களுக்கெல்லாம் வழிகாட்டிய உலக கவிச்சக்ரவர்த்திகளில் எல்லாம் தலை சிறந்த மகாகவிச்சக்ரவர்த்தியின் நினைவாக எடுக்கப் படும் இந்த வாழ்விற்கு எனது வாழ்த்துக்கள்!

  கம்பன் அவன் குறியீடுகளாய் சொன்ன யாவற்றையும் செயல் முறையில் செய்தும் காட்டி இந்த உலகையே ”விழுமின் எழுமின்” என்று அறைகூவல் விட்ட மகாவீரத் துறவியின் கீர்த்தியும் போற்றப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.

  இந்த அருமையான நிகழ்வை முன்னின்று நடத்தும் தலைவர் நண்பர்! கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களுக்கும், உங்களுக்கும் ஏனைய சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும்.

  கம்பன் விழாவின் ஒளி ஒலி காட்சிகளை காண வழிவகை செய்து உலகெங்கும் வாழும் தமிழர் பெருமக்கள் கண்டு உவகை எய்த வழிவகை செய்ய வேண்டிக் கொள்கிறேன்.

  வாழ்க! வளர்க!! உயரிய இத்தொண்டு!!!

 2. Avatar

  அன்பிற்கினிய நண்பருக்கு
  வணக்கம்.

  கம்பனைப் போலொரு கவிஞன்
  காசினியில் வேறு யாருண்டு!
  செம்பொன் அனைய சொற்கள்
  செப்பியவர் வேறு யாருண்டு!
  அம்புவியில் அவன்புகழ் அழியாது
  அன்றும் இன்றும்எப்போதும்
  செம்பு சேராத் தங்கம்
  தமிழுக்கு அவனே சிங்கம்!

  கம்பனுக்கு ஆண்டு தோறும் விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்.
  அதனை பாராட்டும் தங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

  வாழ்க வளமுடன் !

  பெஞ்சமின்

 3. Avatar

  கம்பன் விழா பிரான்சில் சிறப்பாக நடத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. விழா குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும். விழா நிகழ்வுகளை ஒரு சிறு கட்டுரைத் தொகுப்பாக வல்லமையில் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 4. Avatar

  நலமிகு நண்பர் சச்சி அவர்களுக்கு
  வணக்கம்!

  பிரான்சு கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவுக்குத்
  தாங்கள் எழுதிய பின்னூட்டத்துக்கு நன்றி.

  நாங்கள் நடத்தும் எல்லா விழாக்களுக்கும் நேரடி வருணனை எழுதி
  இணையதளங்களில் வெளியிடுவது என் வழக்கம்.
  அதன் படி இந்த விழாவுக்கும் வருணனை வரும்.

  வழக்கம் போல் உரைகள் ‘youtube’ -இல் காணலாம்.

  அன்புடன்
  பெஞ்சமின்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க