Author Archives: பெஞ்சமின் லெபோ

வள்ளுவரும் கழுகாரும்

புதுவை எழில் எச்சரிக்கை முன்னுரை: இதனை வெளியிடுபவர், படிப்பவர், பின்னூட்டம் இடுபவர்… மீது எல்லாம் பாதுகாப்புச் சட்டமும், வழக்குகளும் பாய்ந்தாலும் பாயக்கூடும். ‘தில்’ உள்ளவர்கள் மேலே படியுங்கள் ! விகடனாரை நோக்கி வேக வேகமாகப் பறந்துகொண்டிருந்த கழுகு அரசரை வழிமறித்துப் பிடித்தோம், ஒரு கையில் நல்ல காரம் போட்டு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பும் மறு கையில் புத்தம் புதிதாகச் செய்யப்பட்ட வேர்க் கடலை மிட்டாயுமாக! மூக்கில் வேர்வையும் கண்களில் கூர்மையுமாக நம் கைகளைக் கவனித்த கழுகார் “என்ன செய்தி? ஏன் வழி மறிக்கிறீர்” என்பது ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி – 9

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். சைவ சமயம் வலியுறுத்தும் கருத்து இது. இக்கருத்தையே இக்கால அறிவியல் அறிஞர் Neil DeGrasse Tyson ““We are part of this universe; we are in this universe, but perhaps more important than both of those facts, is that the universe is in us,” என்கிறார்.(Neil DeGrasse Tyson is the director of the Hayden Planetarium at the American ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 8

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சைவத்தைப் பற்றி எழுதி வருவதில் சிலருக்கு வருத்தம் ; வைணவத்தை விட்டுவிட்டீர்களே என்று. அவர்கள் மன நிறைவுக்காக வைணவத்தின் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமே! இதோ வைணவக் காவியமான கம்பராமாயணம் : வை.மு.கோ பதிப்பு. மாரீசன் வதைப் படலம் (சில பதிப்புகளில் இப்பாடல் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம் பெறுகிறது). இராமனால் நிராகரிக்கப்பட்டு இலக்குவனால் உறுப்பு நலங்கள் அழிந்த சூர்ப்பணகை, தன் அண்ணன் இராவணனிடம் வந்து முறையிடுகிறாள். ; சீதையைப் பற்றிக் கூறி அவன் காமத்தைத் தூண்டுகிறாள். “கடவுளர்கள் தத்தம் ...

Read More »

விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி அளவில் விவேகானந்தர் விழா பாரீஸ் 14 -ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்னும் கட்டிடத்தில் நடைபெற்றது. பிரான்சு சிவன் கோவில் தலைவர் திருமிகு அருட்செல்வர் சுகுமாறன் முருகையன் அவர்கள் தலைமை ஏற்க, ஆசிரியர் ப. சின்னப்பா, M.A, B.Ed தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். இந்திய இல்லம் என்ற பொருள் கொண்ட ‘Maison de l’Inde’ -இன் இயக்குநர் திரு பிக்காஸ் சானியால் வரவேற்புரை நிகழ்த்தினார். சுவாமி ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 7

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ ஓரினத்தின் பழமொழிகள் அவ்வினத்தின் நம்பிக்கைகள், அனுபவங்களைக் குறிக்கும். பழமொழிகளைக் கொண்டே அவ்வினத்தின் பழக்க வழக்கங்களை மரபுகளை அறிதல் கூடும். பழைய இனமான தமிழினத்திலும் ஏராளமான பழமொழிகள் உண்டு.அவற்றுள் சில : – விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? – அப்பனுக்குப் பிள்ளை தப்பியா பிறக்கும் – தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை – தினை விதைத்தவன் தினை அறுப்பான் ; வினை விதைத்தவன் வினை அறுப்பான். பெற்றோர்கள் சாடையில் பிள்ளைகள் பிறப்பதை அனைவரும் அறிவர்.மகனின், ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 6

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ கரு உருவாகும் விதத்தை, வித்தையை அறிவியல் வழி நின்று பார்த்தோம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? எண்ணாயிரம் பாடல்கள் அவர் எழுதியதாகச் சொல்வார்கள். ஆனால் கிடைத்திருப்பவை மூவாயிரம் மட்டுமே (3072?)! மூவாயிரமும் தத்துவ முத்துகள்.தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த கலைக்களஞ்சியம் இது! இஃதில் ஒன்பது உட்பிரிவுகள் உள . ஆகமங்கள் 28 என்பர். அவற்றுள் ஒன்பதின் சாரங்களை ஒன்பது பிரிவுகளில் அவர் அளித்துள்ளார். இப்பிரிவுகளைத் தந்திரம் என்று அழைக்கிறார். இவற்றைச் சிறப்புப் பாயிரச் செய்யுள், “தந்திரம் ஒன்பது சார்வு ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 5

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ கட்டுரையின் பகுதி 4 -இல் கூறியதை நினைவில் கொள்வோம் : சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர் “அண்டத்தி லுள்ளதே பிண்டம் பிண்டத்தி லுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 4

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சைவ சமயம் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இச்சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது? சைவத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்குமா? இருக்கிறதா?… இப்படி ஆயிரம் கேள்விகள்…. சைவ சமயத்தின் மையத்தில் இக்கால அறிவியல் உண்மைகள் உள்ளன. சைவ சமயத்தின் ஒவ்வொரு தத்துவமும் விஞ்ஞானத்துடன் பிணைந்துள்ளது. இதனை நம் நாட்டார் மட்டுமல்லாமல் மேனாட்டாரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதோ சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி கூறுவதைக் கேட்போம். பெயரை பார்த்ததும் இது நம்ம ஊர் சாமி என முடிவு கட்ட வேண்டா! சாமி அச்சு, அசல் அமெரிக்கர் ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் பகுதி 3

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு சைவம் : காலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம். மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பா-மோகந்தஜாரோவில் இருந்த திராவிட இனத்தில் சிவ-சக்தி வழிபாடு இருந்தற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நம் தமிழ் இலக்கியங்களைப் பொருத்த வரை, தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 2

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு சமயங்கள் : உலகிலே உள்ள மதங்கள், சமயங்கள் பலப்பல ! இன்ன காலத்தில் உருவானவை என அறுதி இட்டுச் சொல்லக் கூடிய மதங்கள் உண்டு – கிறித்துவம், இசுலாமியம்…போல. தோன்றிய காலம் இது எனக் கூற இயலாமல் தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் மதங்களும் உண்டு – யூத மதம் மாதிரி. இம் மதங்கள் அத்தனையும் ஆசியக் கண்டத்தில் தோன்றியவையே! அக் கண்டத்தில் உள்ள இந்தியாவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்த பெரிய மதங்கள் நான்கு எனலாம் : சமணம், ...

Read More »

சைவ சமயம் அறிவியல் மையம்! (பகுதி 1)

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு சமயமும் அறிவியலும் : சமயம் வேறு ; அறிவியல் வேறு! பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து இது. ஆனால்,சமயத்தைச் சார்ந்திருக்கவில்லை அறிவியல் ; அது போலவே சமயமும் அறிவியலைச் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. என்றாலும், அறிவியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கின்றனர். இரண்டும் தம்முள் முரண்பட்டவை என்ற கருத்து 19 -ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்று இருந்தது. இதனை ‘Conflict thesis’ என்பர். ஒன்றைச் சார்ந்து மற்றது இருக்கவில்லை! சமயம் சொல்வதை ...

Read More »