ஜோதிடம்பொதுவார ராசி பலன்

வார ராசி பலன்28.10.13-03.11.13

மேஷம்: வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திறமைக்கு தகுந்த பணியில் அமர்வார்கள். மாணவர்கள் சில நேரம் ஆசிரியர்களின் கெடுபிடிக்கு ஆளாகும் சூழலிருப்பதால், தங்கள் வேலைகளை உடனுக்குடன் முடிப்பது நல்லது. வியாபாரிகள் முக்கிய முடிவெடுக்கும் தருணங்களில், நிதானமாகச் செயல்பட்டால், நிம்மதி காண முடியும். பெண்கள் நிதி நிலைக்கேற்றவாறு செலவுகள் செய்தால், கடன் தொல்லைகள் அதிகரிக்காது. முதியோர்களின் ஆரோக்கியம் சீராகத் திகழ்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிராது.

ரிஷபம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளியூர்ப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். மனைவி வழி உறவுகளோடு கருத்து மோதலில் இறங்க வேண்டாம். வியாபாரிகள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது. பெண்கள் மனம் விரும்பிய ஆடை, அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வர். சில நேரங்களில் வேலை முடிவதற்கு காத்திருக்க வேண்டி வரும். வெளி இடங்களில் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவு வகைகளில் மிதமாக இருக்க, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்: கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். நட்பும், உறவும் உங்களை விட்டு விலகாது. துவங்கிய காரியங்கள் துரிதமாக நடப்பதால், மனதில் மகிழ்ச்சி தங்கும். கலை ஆர்வம் உடைய பெண்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களால் ஏற்படும் இடையூறுகளை தங்கள் சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். சிலருக்கு வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். வாகன பராமரிப்புக்கு சற்று அதிக பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு கையில் கணிசமான லாபத்தோடு ஒப்பந்தங்களும் வந்து சேரும்.

கடகம்: எப்பாடு பட்டாவது உங்கள் வேலைகளை முடித்துவிடுவீர்கள். முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினரோடு கலந்து ஆலோசித்து செயல்படுவது நன்று. பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளவும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நிதானமாகக் கையாண்டால், பண இழப்புக்களைத் தவிர்த்து விடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்: சுற்றி வளைக்காமல், நேரடியாக விவாதிப்பது குடும்பப் பிரச்னைகளை தீர்க்கும் வழியை எளிதாக்கும். விதிமுறைகளை கடைபிடிப் பதில் சுணக்கம் வேண்டாம் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக முடிக்க தகுந்த நபரை அணுகுதல் நல்லது. வரவு செலவு இரண்டிலும் கவனம் வைப்பது அவசியம். உங்கள் திறமையால், பணி உயர்வைப் பெற்றுக் கொள்வீர்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.கடிதம் மூலம் நல்ல செய்தி வரும்.

கன்னி: வியாபார விஷயங்களில் எல்லாம் தெரியும் என்று செயல்பட்டால், சில சரிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் உங்கள் வேலைகளை விமர்சனம் செய்யும் சூழலுக்கு ஆளாகா வண்ணம் கவனமாக செயல்படுங்கள். பெண்கள் அவசர கதியில் வேலை செய்வதைக் காட்டிலும், நிதானமாக வேலை செய்தால், எடுக்கும் முயற்சிகளில் முழு வெற்றி கிட்டும். வயதானவர்களின் சிறு உடல் உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நல்லது. இல்லத்தில் மங்கள காரியங்கள் நிகழும்.

துலாம்: காதல் ஜோடிகளின் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீடு. மனை விவகாரங்களில் லாபம் தங்க, அவ்வப்போது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வியாபார திட்டங்களின் விரிவாக்கம் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டதாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். உடன் பிறப்புக்கள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் அவ்வப்போது தலை காட்டும். பண வரவு சீராக இருந்தாலும், செலவுகளின் மீதும் உங்கள் கவனம் இருப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்கள் சாக்கு போக்கு சொல்லும் நபர்களிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

விருச்சிகம்: உயர்பதவியில் இருப்பவர்கள் ,பாரபட்சமின்றி பிறருக்கு சலுகைகளை வழங்கினால், நிறுவன வேலைகள் சுறுசுறுப்பாக செல்லும். தம்பதிகள் இடையே இருந்த மனக் கசப்பு நீங்குவதால், மீண்டும் மகிழ்ச்சி பூக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தாரோடு பழகுவதில் ஒரு எல்லை வைத்துக் கொண்டால், தொல்லை ஏதும் இராது. உங்கள் சாமர்த்தியத்தால் வர வேண்டிய வரவுகளை வசூல் செய்து விடுவீர்கள். குல தெய்வப் பிரார்த்தனையை மறவாமல் செய்து வாருங்கள். குடும்பத்திலும், உள்ளத்திலும் நிம்மதி நிலைத்திருக்கும்.

தனுசு: துவங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெற, இதமான போக்கைக் கையாளும் வியாபாரிகளுக்கு அனைத்திலும் வெற்றிதான்! உறவினர் வருகையால், இல்லத்தில் பரபரபரப்பும் மகிழ்ச்சியும் கூடும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு செயல்பட்டால், பாடங்கள் சுமையாய் தோன்றாது. கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தேவையான மருத்தவ பரிசோதனைகளை மேற்கொள்ள, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். இரவலாகப் பொருள்களை தருவதையும், பெறுவதையும் தவிர்த்தல் நலம்.

மகரம்: அரசுத் தொடர்பான காரியங்கள் நினைத்தவாறே முடியும். பெண்களுக்கு இல்லத் தேவைகளை ஈடுகட்டும் அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். உடனிருப்பவர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும். எனவே புதிதாக பணியில் அமர்ந்திருப்பவர்கள், வேண்டாத விவாகாரங்களிலிருந்து தள்ளியே இருங்கள். பொது சேவையில் இருப்பவர்கள் பிறரிடமிருந்து பொறுப்புக்களை பெறும் போதும், தரும் போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். அதிக அலைச்சல், அதிக வேலை இரண்டும் உங்கள் உற்சாகத்தைக் குறைக்கலாம்.

கும்பம்: புதிய ஒப்பந்தங்கள் கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மாணவர்கள் சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், கல்வியில் அதிக கவனம் செலுத்தலாம். பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் இதமான அணுகு முறையைக் கையாண்டால், பல பரச்னைகளுக்கு உடனடியான தீர்வு கிட்டும். பெண்கள் வரவுக்கு ஏற்ற செலவு என்பதில் கவனமாக இருந்தால், கடன் தொல்லையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். அனுசரித்து செல்லும் தம்பதியர் நடுவே அன்பும், பாசமும் பெருகும்.

மீனம்: புது உறவுகளின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கலகலப்பும் கூடும். பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால், வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள், வீண் பழிகளைத் தவிர்க்க, கூடுதல் கவனத்துடனும், திறமையுடனும் செயல்பட்டு வருவது அவசியம். பெண்களுக்கு குடும்பத்தாரோடு புதிய இடங்களுக்கு சென்று மகிழும் வாய்ப்பு கூடி வரும்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க