சரியா? தவறா?
தேமொழி
காலிக் கோப்பையில் எறும்புகள்
கண்டன இனிப்புச் சுவைதனை
கழுவும் வேளையும் வந்ததுவே
கண்டேன் நானும் எறும்புகளை
கவனக் குறைவால் அலசிவிட்டால்
கண்டிடும் மரணத்தை அவ்வுயிர்கள்
அக்கறை கொண்டு செயல்பட்டால்
அத்தனை உயிர்களையும் என்னால்
அன்புடன்தான் காத்திட இயலும்
அன்றுடன் முடியாது தொடர்வதற்கு
அச்சிற்றெறும்புகளின் வாழ்க்கையிலோர்
அல்லல் நீக்கும் தேவதையாவேன்
சின்னஞ்சிறு தட்டல்களினால் தரையில்
சிதறியோடின எறும்புகள் எங்கும்
சிற்றெறும்பொன்றோ தன்கால் மாட்டிச்
சிக்கித் தவித்தது கோப்பைப் பிசுக்கில்
சிறுகுச்சியினால் விடுவித்தேன் அதனை
சிறிது தள்ளாடியே விழுந்தது தரையில்
நடக்க முடியாது தவித்த எறும்பின்
நட்பும் சுற்றமும் விட்டு விரைந்தோடின
நலிவுற்றுப் போகும்படி முடமாக்கினேனோ
நாளும் அதற்கினி தனிமையில் உயிர்வதையோ
நானும் துயருற்றேன் கொன்றிருந்தால் அதை
நல்லதோர் முடிவாக இருந்திருக்குமோ ஐயகோ
படம் உதவி:
http://thumbs.dreamstime.com/x/cup-saucer-ants-16755972.jpg
வல்லமையில் தன்னுடைய நூறாவது முத்திரைப் பதிப்பைச் ’சரியா? தவறா?’ எனும் அழகிய கவிதையாய்ப் படைத்தளித்துள்ள அன்புத் தோழி தேமொழிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!
பல நூறு படைப்புக்களைத் தொடர்ந்து வழங்கி வெற்றி மங்கையாய் வலம்வர இறையருள் துணை நிற்கட்டும்!
அன்புடன்,
மேகலா
நூறாவது படைப்புக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தேமொழி!!!!
முடியாதபோது விட்டுச்செல்லும்
நட்பும் சுற்றமும்..
நல்ல கவிதை,
சதமாய்ச் சாதித்த
தேமொழிக்கு வாழ்த்துக்கள்…!
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் வழங்கிய அன்புத் தோழியர் மேகலாவிற்கும் பார்வதிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அன்புடன்
….. தேமொழி
எறும்புக்கும் இரங்கும் தங்களின் குணம் கண்டு மகிழ்ச்சி சகோதரி. தங்களது நூறாவது படைப்புக்கு என் வாழ்த்துக்கள்.
வல்லமைக் கவிஞர்கள் திரு. செண்பக ஜெகதீசன் மற்றும் திரு. சச்சிதானந்தம் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
….. தேமொழி
பொன்னியின் செல்வன்
சுருக்கித்தந்த
திருப்பாவை
இன்று
தன் கைப்பட தந்தார்
ஒரு பாவை
வண்ணத்தூரிகையும்
வாழ்க்கை நலமும்
தந்த பெண்ணின்று
அதி வேகமாய் தந்தார் ஒரு நூரை
அது
வல்லமையின் சச்சின் என்றே
மாற்றுது தேமொழியின் பெயரை.
இன்னும் பல நூறு படைப்புகள் தர வாழ்த்துக்கள், தேமொழி
வணக்கம் தோழி
வண்ணத் தூரிகை அழகாய் தந்தவர்.
கவிதையும் மொழிகிறார் இங்கே தன்
எண்ணமும் வண்ணமாய் இடுக்கிறதென்று
எடுத்துரைத்தாரெ தேமொழி தெவிட்டாமல்
நூறாவது படைப்பிற்கு என் வாழ்த்துக்கள் தோழி….!
வாழ்த்துக்களை வழங்கிய தோழர் தனுசுவிற்கும், தோழி இனியாவிற்கும் நன்றிகள் பல.
அன்புடன்
….. தேமொழி