நான் அறிந்த சிலம்பு – 101
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
இந்த ஒலிகள் மட்டுமன்றி
இசைக்கருவிகளான
ஆம்பி, கிழார்,
உரத்து ஒலிக்கும் ஏற்றம்,
நீர் இறைக்கும் கூடை
இவற்றின் ஒலியும் கேட்டபடி இருந்தது.
வயல்களில் கரும்பும் நெல்லும்
செழித்து வளர்ந்துள்ள
மருதநிலத்தின் நீர் நிலைகளில்
பசுமையுடனும் பொலிவுடனும்
தாமரைகள் பூத்து நிற்கும்.
சம்பக்கோழியும்
உரத்து ஒலிக்கும் நாரையும்
செங்கால் அன்னப்பறவையும்
பசிய கால்களைக் கொண்ட கொக்கும்,
கானாங்கோழியும், நீர்க்காக்கையும்
உள்ளானும், குளுவையும்,
கணத்துப்பறவையும், பெருநாரையும் ஆகிய
நீர்நிலைப்பறவைகள் ஒன்றுகூடி
உரத்த பலவகைக் குரல்களை எழுப்பின.
இருபெரு வேந்தர்கள்
போரிடும் போர்க்கள ஓசையைப் போலவே
அப்பறவைகள் எழுப்பிய ஒலிகள்
இடையறாது எங்கும் ஒலித்தபடி இருந்தது.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 110 – 119
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html