சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை..
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை! கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!
மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார். அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள். பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் அவர்களே!!
தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும், சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்க, தேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் – இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன. திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் ‘பார்முலா’ ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.
தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. ‘த’ வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும், தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!
இவ்வரிசையில் அமைந்த ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!
ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்.. அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)
காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..
குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..
ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்? இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).
கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)
http://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4
http://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4
காவிரிமைந்தன்
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
காவிரிமைந்தன்