ஆம் ஆத்மி பார்டி(பாமர மக்கள் கட்சி)

சமீபத்தில் டில்லியில் நடந்த தேர்தலில் ஒரு பின்னணியும் இல்லாத
‘டேவிட்’ போன்ற பா ம கட்சி ’கோலியத்’ போன்ற காங்கிரஸ், பா ஜ க போன்ற கட்சிகளுடன்
மோதி அமோக வாக்குகளைப் பெற்று இன்று அரசாங்கம் அமைக்க உள்ளது.

அக்கட்சியின் சின்னம் துடைப்பம். அது குறித்து ஒரு கவர்ச்சிகரமான இந்தி வாசகம் கண்டேன்.
இந்தியில் ’ஜாடு கா ஜாது’ என்பதே அது. தமிழில் ‘துடைப்பத்தின் மாயாஜாலம்’ என மொழி பெயர்க்கலாம்.
அதைக் கண்டதும் பல சிந்தனைகள் என் மனத்தில் ஓடின. அவை பின்வருமாறு:
.

துடைப்பம் லஞ்சக் குப்பைகளைத் துடைக்குமா?

துடைப்பம் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்குமா?

துடைப்பம் அதிகார தோரணைகளை உடைக்குமா?

துடைப்பம் இவையெலாம் செய்து சரித்திரம் படைக்குமா?

 

மொட்டவிழ்த்து பா ம கட்சி மலரும் முன்னரே சூழ்ச்சிகளைக்

கட்டவிழ்த்து அதனை கசக்கிவிடுவரோ எதிர்க்கட்சியினர்?

 

காத்திருப்போம் என்னதான் நடக்கப்போகிறது என்பதைக் காண

எதிர்பார்த்திருப்போம் பா ம கட்சி சோதனையில் வெற்றி பெறவே!

 

சு.கோபாலன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆம் ஆத்மி பார்ட்டி

  1. ஆம் ஆத்மி பார்டி ஜாம் ஜாம் என்று இந்திய அரசியலில் புரட்சிகளைச் செய்யட்டும்.

Leave a Reply

Your email address will not be published.