2014 வருக….
“யார் அஙகே? நுழைகிறாய் ?
யாருக்கும் அஞ்சாமல் நுழைந்தும் விட்டாயா?
பார்க்க அழகாகத்தான் இருப்பாய்.
பார்க்க முடியவில்லையே உன்னை
இனி .புரிந்து விட்டது எனக்கு
இனிய புத்தாணடு நீதானோ ?
,நீதான்” இரண்டாயிரத்து பதினாலோ?”
நீ வர என் வயது குறைகிறதே!
“நான் தான் காலதேவன்
காலம் என் கையில் .
ஒருவருக்கும் நிற்பதில்லை
ஒருவர் சொல்லையும் கேட்பதில்லை
ஓயாமல் கடமையைச் செய்கிறேன்
ஒடிக்கொண்டே இருக்கிறேன் ,
எத்தனை விடிவுகள்
எத்தனை வீழ்ச்சிகள்.
எத்தனை மலர்ச்சி
எத்தனை இகழ்ச்சி ”
” இனிய வரவேற்பு , காலதேவா,
இந்த வருட கணிப்பு என்னவோ?
என் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி
எத்தனை சாம்ராஜ்ய கனவுகள் !
என் கனவுகள் நினைவாகுமா?
என் உழைப்புக்கு பலன் கிட்டுமா?.
மழைப்பொழிய காட்டு கருணை
மாநிலங்களில் நிரப்பு மகிழ்ச்சி
பசுமை விரிப்பில் என் மகிழ்ச்சி
பஞ்சம் நீக்கி வளமாக்கு நாட்டை.
கொடுப்பாயா எங்கும் சுகம்
கொட்டுவாயா எங்கும் இன்பம் ?”
“இன்பம் அளிக்கவே வந்துள்ளேன் .
இதை துன்பம் ஆக்குவது நீங்களே!
எங்கும் இயற்கையின் எதிர்ப்பு
எங்கும் மரங்களின் ஒழிப்பு
பல காடுகளின் அழிவு
பிராணவாயு முறிவு
எங்கும் கான்கிரீட் கட்டடங்கள்.
எட்டி ஆகாயம் வரை எழுப்ப
அங்கே மாரி எப்படி பெய்யும் ?
அங்கே பசுமை எப்படி அமையும் ?”
2014 காலதேவனே
மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க
மங்கலப்பொங்கலில் அனைவரும் களிக்க
பஞ்சபூதங்களுடன் கலந்த நீ
பாரினில் முக்காலங்களில் தவழும் நீ
எங்களைப் பூரிக்க வைப்பாயா?”
எங்கள் உடல் நலம் காப்பயா?
“சந்தோஷம் என்பது உங்கள் கையில்
சற்றே இன்று சிந்தியுங்கள்
இன்பம் துன்பம் உங்கள் மனதில்
இனி வேண்டாம் இந்த மதபேதம்
பழிக்குப்பழி அகலட்டும்
பட்டென்று அகற்றுங்கள் சாதி வெறி
அருமையான போதனைகள் கண்டு
அன்பின் வழி நடப்பதுவே முறை
இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கைக் கரும்பு
மனித நேயம் வளர ,மலரும் அங்கு அரும்பு ”
படத்துக்கு நன்றி
http://www.hdwallpapersinn.com/happy-new-year-2014-cards.html