புத்தாண்டு வாழ்த்துக்கள்
கண்களை மூடி
கடவுளை நினைத்தால்
அவன்
பிரகாசிக்கிறான் உள்ளத்தில்
அதே கண்களை மூடி
தோழமையை நினைத்தால்
உள்ளே சிலாகிப்பதோ நீங்கள்
நட்புக்கு நல்லதோர் தேரானாது
இந்த சின்ன உவமை
என் வலை நட்பில்
அழகானது நம் வல்லமை
முன்னேற வேண்டுமா
முன் மாதிரியாக வேண்டுமா
அதற்கு
மாற்றி யோசி எனும் முழக்கம்
முழுமையைடைந்திருக்கும் இவ்வேளையில்
அதையும் மாற்றி யோசித்து
இனி
யோசித்து மாறு எனும் மந்திரம்
உங்கள் முன் வைத்து
வாழ்த்துகிறேன்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
படத்துக்கு நன்றி
http://www.newhdwallpapers.in/happy-new-year/happy-new-years-2014-6/
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சச்சிதானந்தம்.