‘காரசாரம்’ நிகழ்ச்சியின் காணொலிப் பதிவு
பொதிகைத் தொலைக்காட்சியின் காரசாரம் நிகழ்ச்சி, வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அந்தத் தலைப்பை ஆதரித்தும் எதிர்த்தும் இரு அணியினர் தங்கள்
வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இதில் அந்தத் தலைப்பினை ஒட்டி, அதில் வல்லுநர்களாக உள்ள இருவர், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள்.
இந்தக் காரசாரம் நிகழ்ச்சியில், இணையத்தளங்கள் மற்றும் செல்பேசிகள், சமுதாயத்திற்குத் துணையா? தொல்லையா? என்ற தலைப்பிலான விவாதம், 2011 ஜூன் 14, செவ்வாய்க்கிழமை அன்று இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பானது. இதே நிகழ்ச்சி, 2011 ஜூன் 17
வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1 மணிக்கு மறு ஒளிபரப்பானது.
இதில் துணை என்ற கருத்தினை வலியுறுத்தி, வல்லமை நிறுவனரும் தமிழ் இணைய ஆராய்ச்சியாளருமான அண்ணாகண்ணன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தீமை என்ற கோணத்தில் வழக்கறிஞர் வே. பாலு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதில் இரு
அணியிலும் பலர் பங்கேற்றார்கள். வல்லமையின் ஆசிரியர் குழு உறுப்பினர் ஸ்ரீஜா வெங்கடேஷ், வல்லமையின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்வ முரளி, கட்டற்ற மென்பொருள் வல்லுநர் ஆமாச்சு என்கிற ஸ்ரீராமதாஸ், வலைப்பதிவர் ஸ்டாலின் பெலிக்ஸ் உள்ளிட்ட பலரும்
தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் காணொலிப் பதிவினை இங்கே காணலாம்:
பகுதி 1:
[youtube=http://www.youtube.com/watch?v=OgyCi1jNPf0&w=640&h=385]
பகுதி 2:
[youtube=http://www.youtube.com/watch?v=XQFYd1upnbs&w=640&h=385]
பகுதி 3:
[youtube=http://www.youtube.com/watch?v=XMF5mAH7LSg&w=640&h=385]
பகுதி 4:
[youtube=http://www.youtube.com/watch?v=2_wGjpv_LJA&w=640&h=385]
நெறிப்படுத்தி நடத்தியவர்: ஜான் தன்ராஜ்
தயாரிப்பு: எம். திருநாவுக்கரசு
பதிவும் வலையேற்றமும்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
நன்றி: பொதிகை