மேகலா இராமமூர்த்தி

Tamil-Daily-News-Paper_36939203740

 

ஆதியும் அந்தமும் இல்லாத – அந்த

ஆண்டவன் போலவே எந்நாளும்

காதலும் காலத்தை வென்றதடி – வளைக்

கைகொட்டிக் கும்மி கொட்டுங்கடி!

 

தேசம் இதற்குக் கிடையாதடி – ஒரு

பாஷையும் தேவை யில்லையடி!

தோசமு மில்லாத் தூயதடி – உண்மை

நேசத்தில் தோன்றி மலருமடி!

 

கண்க ளெனும்வாசல் நுழைந்திடுமே – மனக்

கோயிலில் என்றும் நிலைத்திடுமே!

எண்ணிட இன்பம் தந்திடுமே – காதல்

வாழ்வினில் வண்ணம் கூட்டிடுமே!

 

ஆண்டியும் காதலில் ஆழ்ந்திடுவான் – அடி

அரசனும் காதலில் வீழ்ந்திடுவான்!

ஆண்டாண்டு காலமாய் நாம்தேடும் – நல்ல

பொதுவுடை மைப்பொருள் காதலடி!

 

சாதி ஒழிந்திடும் காதலிலே – மதச்

சண்டை அழிந்திடும் காதலிலே!

வீதியில் நின்று சொல்லுங்கடி – இந்தக்

காதலுக் கீடு இல்லையென்றே!!

 

படத்துக்கு நன்றி

 

http://www.dinakaran.com/News_Detail.asp?nid=1833

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காதல் கும்மி!

  1. பொதுவுடைமைப் பொருளா காதல்!!!! இக்கருத்து சிரிப்பினை வரவழைத்தது மேகலா.  அருமையான கும்மிப் பாடல், நன்று.

  2. அருமை. எளிமையான வரிகள் மனத்தைக் கவருகின்றன. வாழ்த்துக்கள் சகோதரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *