சேவா பூஷன் விருது
நம்முடைய வல்லமை இதழின் ஆசிரியர் குழும உறுப்பினர் திரு. தூரிகை சின்னராஜ் அவர்கள் சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயல், இசை, நாடகசபா வழங்கும் “சேவா பூஷன்” விருது பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . திரு சின்னராஜ் அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
“என் படைப்புகள், மற்றும் குழந்தைகளுக்கான எதிர்காலச் சேவைகளை சமுதாய வளர்ச்சிக்காகப் பயன்படும் வகையில் நகர்த்தவேண்டும் எனும் பொறுப்பும் எனக்கு அதிகரித்து இருப்பதையும் நான் உணர்கிறேன்” என்கிறார் இவர்.
விருது வழங்குவோர்: நடன இயக்குனர். புலியூர் சரோஜா, இயக்குனர் இமயம் எஸ்.பி.முத்துராமன், முனைவர்.கோ.ராதா.
தூரிகை சின்னராஜ் .
T.CHINNARAJ
MA.,MA.,M.L.I.Sc., TTC(Art).,
Librarian & Creative Head.
Learning Resource Centre,
SATCHIDANANDA JOTHI NIKETHAN INTERNATIONAL SCHOOL,
Ooty Main Road, Mettupalayam-641 305.
அன்புடன்
பவள சங்கரி