இசைக்கவி ரமணன் – அனு ரமணன் மணிவிழா வாழ்த்து
திருவாழும் பதிமயிலைத் திருப்பதியில்
திருமகளும் கலைமகளின் கண்மணியும்
பார்போற்றும் தம்பதியராய் புவிவாழ்த்தும்
கவியும் பாரதியும் போல பரிதியும் அல்லியும்போல
கடலும் அலையும்போல இணைந்தே இதமாய்
நட்பும் சுற்றமும் அலையலையாய் அருகிருந்து
பாசமும் நேசமும் பெருமழையாய் பொழியவே
பொங்கும் அன்பும் பொற்றாமரையாய் பொலிகவே
நலமும் வளமும் தடையறப் பெருகிடவே
இசையும் கவியுமாய் இணைந்திருப்போரின்
இதயமாய் இருக்கும் இல்லாளின் இதத்தோடு
இன்னுமொரு நூற்றாண்டு நித்தியமாய்
பொங்கும் மழையாய் நீவிர் இருவரும்
பெரியோர் ஆசிகளுடன் வாழ்வாங்கு வாழ்வீரே
நன்மக்களும் நல்லாசிகள் பெற்றுய்யவே
நீவிர் நித்தியப்புன்னகையுடன் வாழிய வாழியவே!
வாழ்த்துரைக்கட்டும் தெய்வங்களைனைத்தும்
சித்திகளனைத்தும் வசமாகட்டும் உங்களுக்கு
ஆலம் விழுதுகளாய்ப் பரவி நிற்கும் உங்கள்
வேர்கள் கண்டு என்றென்றும் வாழ்த்துரைக்கட்டும் என் நா!!
பூமரத சாந்திக்கும் சதாபிஷேகத்திற்கும் கனகாபிஷேகத்திற்கும்
வேதமந்திரங்களுடன் நட்பும் உறவுமாய் நிறைந்த வாழ்த்து
எட்டுத்திக்கும் சங்காய் முழங்க வாழ்வாங்கு வாழ்வீரே நீவிர்!!!
மணிவிழா காணும் மகத்தான தம்பதியருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இசைக்கவி ரமணனின் கவிதைச் சொற்பொழிவை பலமுறை கேட்டு ஆனந்தம் அடைந்தவன் நான். மணிவிழா காணும் பாரதி அன்பரை பல்லாண்டு வாழ மனமார வாழ்த்துகிறேன். அவர் புகழ் மேலும் வளர அன்னை அபிராமி அருள் புரிவாளாக!
உன்னைக் கரம்பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி..
பொன்னை அடைந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி..
கவியரசு கண்ணதாசன்
இதைவிட எந்த வார்த்தைகளால் வாழ்த்திட முடியும்?
அன்புடன்.. காவிரிமைந்தன்
வார்த்தைகளில் வடித்துவிட முடிவதில்லை வாழ்க்கை கவிதையை, ஆனால் இவர்களைபோல் சிலரது வாழ்க்கை வடிக்கிறது காவியங்களை…. ஆசிர்வாதத்திற்காக வணங்கி நிற்கிறேன் நான்