மக்கள் கேட்கும் கேள்விகள் (6)

பவள சங்கரி

தலையங்கம்

மதிப்பிற்குரிய ஐயா அன்னாஅசாரே அவர்களே,

நீங்கள் புவனேசுவரத்தில் ஆரம்பித்துள்ள இரண்டாவது சுதந்திரப் போரட்டம் மூலமாக 2024 இல் மிக அதிகமாக விவசாயிகளையே பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பப்போவதாகக் கூறியுள்ளீர்கள். உங்களுடைய முதல் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன? முடிவுற்றதா? வெற்றி பெற்றுவிட்டீர்களா? ஊழலுக்கு எதிரான உங்களுடைய போராட்டத்தின் இன்றைய நிலை ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஊழல்வாதிகளை தங்களுடைய வேட்பாளர்களாக அறிவித்துள்ளனரே. இந்த அரசியல்வாதிகளை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா? அன்றாடம் மக்கள் உங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இப்படி ஏதாவது புதிய போராட்டம் அறிவிக்கிறீர்களா?

வாக்களிப்போம்!

ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

விலை போகாமல் வாக்களிப்போம்!!!

 

Share

Comments

One response to “மக்கள் கேட்கும் கேள்விகள் (6)”

  1. சபாஷ்! சரியான கேள்வி. இவருக்கு முன்பு இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை முன்நின்று நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறைந்த பட்சம் காங்கிரசை வீழ்த்தி ஜனதா அரசையாவது கொண்டு வந்தார். அதுவும் அல்பாயுசில் போய்விட்டது. அவராலேயே எதையும் சாதிக்க முடியாதபோது இந்த கோமாளியால் எதுவும் செய்யமுடியாது. இவர் நடத்துவது ஒரு டிராமா. அதில் பாத்திரமேற்று நடித்தவர் தனிக்கம்பெனி வைத்து லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். ஒப்பிட வேண்டுமானால், அவர் பொன்னுசாமி வாத்தியார், நாடகக் கம்பெனியில் பல நடிகர்களை உருவாக்கியவர், அவர் சீடர் சிவாஜி கணேசன், அதாவது கேஜ்ரிவால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *