கிரேசி மோகன்

15032009072

தானன தானன தானன தானன
தானன தானன -தனதான….
———————————————————————————————————-

Poothana_Moksh

பாலினில், சேடனின் பாயினில், த்வாபர 969181_504980929606941_408884359_n
வேளையில், பூபளு -நினைவாலே,
காவலில், தேவகி பாலனில், ராவினில்,
தாளெழு தாவலை -யமுனாவில்,

சீலமும் சீர்வளர் ஆயர்தம் பாடியில்,
யாதவ பூமியில், -வசுதேவர்
போய்விட வேறொறு தாய்மடி தாவலில்,
மாமனின் தேதிசொல், -நவகாளி,

பாலளி பூதனை ப்ராணனில், காளியன்
மேல்நட மாடிடும் -இருகாலில்,
வேணுவின் ஓசையில், பேணிடும் கோவினில்,
ராதையின் காதலில், -நடுவோனில்,(ஐவரில் நடுவோன் அர்ச்சுனர்)

நூலினில் கீதையில், நாணினில், மாருதி
தேரினில், பாரதம் -புரிவோனே.
பாரினில் நாமதை காணவு லாவரு,
ஷீரடி சாய்குரு -பெருமாளே….கிரேசி மோகன்….

————————————————————————————————————————

 

பின்-குறிப்பு- பார்க்கும் யாவற்றிலும் பெருமாளை மட்டும் பார்த்தால் திவ்ய தேசம்….பார்க்கும் யாவற்றையும் பெருமாளாகவே பார்த்தால் பாரத தேசம்….அப்படிப் பார்த்தபோது, இன்றைய சந்தத்திற்கு உட்பட்டு எழுந்தருளினார் சத்குரு ஷீரடி சாயி பெருமாள்….இந்த உலக ‘’உள்ளே வெளியே’’ விளையாட்டில் நாம் ஜெயிக்க, உள்ளிருந்து உழைப்பவர் பெருமாள்….வெளியிலிருந்து வழங்குபவர் குருநாதர்….கடவுளும்-குருவும் ஒன்றே….இருவருக்கும் குறைந்த பட்ச வேற்றுமைகள் ஆறிருந்தாலே அதிகம்….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *