உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. கவியரசு கண்ணதாசன்

படம்: அவளுக்கென்று ஒரு மனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.ஜானகி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்hqdefault
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. உன் உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்.. பல்லவியில் உள்ள சுகம் அனுபவிக்க இன்னுமொரு பிறவி வேண்டுமோ? இந்த வரியை வாசிக்கும்போதும், பாடலைக் கேட்கும்போதும் உள்ளத்தில் சுகம் ஆறாகப் பெருகி வருகிறது! இசையின் கோர்வை பாடலை உச்சத்திற்கு இட்டுச் செல்ல.. குரலின் இனிமை நம்மை ஏதோ இன்பத்தீவிற்கு கடத்திச் செல்கிறது.

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது

சரணமா? இது சரம் சரமா? வாரத்தைகளில் உள்ள எளிமை.. இசையில் விளையும் இனிமை.. ரசித்துக் கேளுங்கள்.. ஆனந்த பைரவியா அல்லது மோகனமா? நானறியேன்..

இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ…. தடுத்தால் கூட தருவேன்

மொத்தத்தில் இங்கே பெண்மை பேசுகிறது! வன்மையைத் தொட்டு ஒரு பெண்மையை பேச வைக்கும் கவிஞரின் திறமெண்ணி வியக்கிறேன்!

இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

எத்தனை எளிமையான சொற்கள்.. நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே.. கவி ஆட்சி நடத்துகின்றார்! பாடலை உணர்ந்து கேளுங்கள்.. காதலின் பவித்ரம் புரியும்!

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது

கனகச்சிதமான வார்த்தைகள் நெருக்கமாய் தொடர்ந்துவர.. கவித்துவம் ததும்பி காதலைச் சொல்லி நமக்கு மயக்கம்தர..

என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

கனவா நனவா.. கவிதைச் சுவையா? பாட்டு ஒன்றுக்குள் பல்சுவை தருகின்ற பல்கலைக்கழகம் கண்ணதாசன் எனலாமா?

கவிஞர் எழுதிய திரைப்பாடல்களின் பல்லவிகள் பல நேரங்களில் திரைப்படங்களாய் வெளியாகின என்பதற்கு சான்றுகள் பல உண்டு! இதோ அவ்வகையில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..

-கவிஞர்.காவிரிமைந்தன். துபாய். 

 

http://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க