மாதவன் இளங்கோ
என்னுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன –
தாவரங்கள்!
எனக்குத்தான் அது கேட்பதில்லை!
கேட்டாலும் அதுபற்றி
எனக்குக் கவலையில்லை!
உன்னுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன –
கால்நடைகள்!
உனக்குத்தான் அது கேட்பதில்லை!
கேட்டாலும் அதுபற்றி
உனக்குக் கவலையில்லை!
அவனுடைய வன்முறையை எதிர்த்துக்
குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் –
நீயும் நானும்!
அவனுக்குத்தான் அது கேட்பதில்லை!
கேட்டாலும் அதுபற்றி
அவனுக்குக் கவலையில்லை!

Leave a Reply