கிரேசி மோகன்

 

Venugeetham, watercolor, #Krishnafortoday Keshav
Venugeetham, watercolor, #Krishnafortoday Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் காப்பு’’
——————————

Gosakha. Oil on canvas. 2006. #krishnafortoday  Keshav
Gosakha. Oil on canvas. 2006. #krishnafortoday Keshav

வையங்கள் ஏழை, வயிறார உண்டும்,
ஐயம் மிகக்கொண்டு அய்யனே ,-கையால்,
பிடித்துக் கமலப், பதவிரலை அன்று,
கடித்துக் களித்தவனே, காப்பு….

நான்மறை ஓதிடும் ,நான்முகன் வாழ்ந்திடும்,
தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்,
சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
கந்திடும் திண்மார்பும் காப்பு….

மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
பீதகப் பட்டாடை பாழாகக், -காதினைக்,
கைகளால் பற்றி, கரணமிட்(டு) ஆழியை
கொய்தகோ பாலனே, காப்பு….

தேர்கடவி, பாரதப் போர்முடிக்க, பார்த்தனின்
சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோன், -மோர்குடத்தை
கல்லால் உடைத்தன்று, கோபியர் கோபத்திற்க்
குள்ளான கண்ணனே காப்பு….

சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்,
தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட, -போக்கிரிப்
பையனே. பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
கையனே, கண்ணனே, காப்பு

——————————————————————————————–

 

படங்களுக்கு நன்றி :

http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.